You are here
Home > 2013

23 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

23 ஆம் ஆண்டு முற்றோதல் விழா விழா அழைப்பிதழ் 23nd year - Thirumanthiram Recital A ONE DAY PROGRAM - SEVEN sittings December 25th 2013 - Wednesday - 7am to 7pm Venue :: Padmavathy Thirumana Manadapam, 29, Dharamaraja Koil Street, Saidapet, Chennai – 600 015 Program Highlights :: * A Yearly Event – 2013 is 23nd year * This year : Second Thanthiram(4th Round)

அறத்தமிழ் வேதம் – மூதுரை – வேங்கை வரிப்புலிநோய்…

இளம்பூரணன்    தெள்ளிய உள்ளச் செல்வங்களே!        இன்று நாம் பார்க்க இருக்கும் மூதுரைப் பாடல் இதுவே:         ”வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி         ஆங்கதனுக் காகார மானாற்போல் – பாங்கறியாப்         புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்         கல்லின்மேல் இட்ட கலம்.”       சிறிய வயதில் உள்ளம் கள்ளம் கபடம் ஏதும் இல்லாமல் அழுக்கேறாமல் பளிங்கு போல தெளிவாக இருக்கும். அதனால் வெளி உலகில் காண்பன அத்தனையும் உண்மை என்று நம்பத் தோன்றும். ஆனால் என்ன

சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில் – பகுதி 15

செந்தமிழ் வேள்விச் சதுரர் முருகப்பெருமான்: தந்தையே! சற்று முன் உயிர்கள் சிவோகம் பாவனையில் தோய்தல் வேண்டும் என்று விளக்கினீர்கள். சிவம் எந்த நிலையில் உள்ள சிவம் என்பது ஒரு முக்கியமான விஷயம் அல்லவா? சிவபெருமான்: சரியாகச் சொன்னாய் மகனே! சிவம் இரண்டு வகைப்படும். 1) பரசிவம் 2) அபரசிவம். சிவோகம் பாவனையில் தோய வேண்டிய உயிர் அபரசிவத்திலேயும்  சிவோகம் பாவனையாகத் தோய வேண்டும்; பரசிவத்தோடும் சிவோகம் பாவனையாகத் தோய வேண்டும். முருகப்பெருமான்: போச்சுடா! இங்கே

சைவக்கேள்விச் சிற்றம்பலம் – பகுதி14

செந்தமிழ்வேள்விச் சதுரர் அறிவாகரர்: என்ன சிற்றம்பல அன்பரே! என்ன கொஞ்ச நாட்களாக ஆளையே காணோம். எல்லா சந்தேகங்களும் தீர்ந்து விட்டனவா? சிற்றம்பல அன்பர்: சந்தேகமாவது தீர்வதாவது. எந்தேகம் இருக்கிற வரைக்கும் சந்தேகம் தீராது என்று நினைக்கின்றேன். இடையில் கார்த்திகை தீபம் வந்துவிட்டது. எனவே திருவண்ணாமலை சென்றிருந்தேன். அப்பப்பா! என்ன கூட்டம், என்ன கூட்டம்! ஏறத்தாழ 20 லட்சம் பேர் இருக்கும் என்கிறார்கள். அறிவாகரர்: நீங்கள் குறைவாகச் சொல்கிறீர்கள். எனக்குத் தெரிந்த கணக்குப்படி மொத்தம் 33

சேய்த்தொண்டர் புராணம் பகுதி 26 பொய்யாமொழியார் வரலாறு

செந்தமிழ் மாருதன் “இம்பரெலாம் பரவுறுபொய் யாமொழியார்க் கடியேன்”        இந்த உலகம் தோன்றி நின்று அழிவது என்பது சித்தாந்தம் நிறுவும் கொள்கை. ஆனால் இந்த உலகில் காணப்படும் உயிர்கள் அநாதி அதாவது என்று தோன்றியது என்று கூற இயலாததாய் என்றும் உள்ளது என்று சித்தாந்தம் கூறுகிறது. உயிர் மட்டுமல்ல, உயிர்களையும் உலகையும் இயக்குகின்ற இயவுள் எனப்படும் கடவுளும் அநாதி என்றும், அதாவது ‘என்றும் உள்ள பொருள்’ என்பது சித்தாந்தம். அவ்வளவு தானா? வேறு

அறமும் காவலும்

ஆசிரியர் மேசையிலிருந்து . . . அறமும் காவலும் – “புதிய தலைமுறை” தொலைக்காட்சி விவாதம்.                29/10/2013 ஆம் நாளன்று ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்து அறநிலையத்துறை தொடர்பாக சட்டமன்றத்தில் ஒரு சட்ட திருத்த முன்வடிவு முன் வைக்கப்பட்டிருக்கிறது. அது பற்றிய ஒரு விவாதம் ‘நேர்பட பேசு’ என்கிற நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது. அதில் தாங்கள் கலந்து கொண்டு கருத்தளிக்க முடியுமா என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இரவு

சேய்த்தொண்டர் புராணம் பகுதி 25 முருகம்மையார் வரலாறு

செந்தமிழ்மாருதன்               “நலந்திகழும் முருகம்மை அடியார்க்கும் அடியேன்”        சிவனடியார் அறுபத்துமூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையாருக்கு ஒரு தனியிடம் உண்டு. ஏனைய நாயன்மார்கள் அனைவரும் நின்று கைகூப்ப, காரைக்கால் அம்மையார் மட்டும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் பெருமை பெற்றவர். அது போல, சேய்த்தொண்டர்கள் அனைவரிலும் முருகம்மையாருக்கு ஒரு தனியிடம் உண்டு.        இவரைப் பற்றி பல பெரியோர்கள் பாடிப் பரவி இருக்கிறவர்கள். நக்கீரர் உரைத்த திருமுருகாற்றுப்படைக்குச் சாற்றுக்கவிகள் பத்தில் ஒரு பாடல் இந்த முருகம்மையாரைப்

அறத்தமிழ் வேதம் பகுதி 13 கானமயில் ஆட. . .

மூதுரை        இளம்பூரணன் அன்புச் செல்வங்களே!         இன்று நாம் பார்க்க இருக்கும் பாடல்: மூதுரையில் வரும் 14 - ஆவது பாடல். இந்தப் பாடல் மிகவும் புகழ் பெற்றது; பலரும் மேற்கோள் காட்டக் கேட்டிருக்கலாம். அந்தப் பாடல் இதோ!       கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி       தானும் அதுவாகப் பாவித்துத் – தானும்தன்       பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே       கல்லாதவன் கற்ற கவி.           கலைகள் எல்லாம் நமக்குக் கைவர வேண்டுமென்றால்

சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில் பகுதி 14

- செந்தமிழ்வேள்விச் சதுரர் முருகப்பெருமான்: “சிவோகம் பாவனை என்று உயிர்கள் செய்ய வேண்டிய பாவனை எது என்று விளக்கிக் கூறினீர்கள், தந்தையே! இன்னும் சற்று விளக்கமாகக் கூறினால் உலகம் பயன் பெறும்.” சிவபெருமான்: “சிவன் வேறல்ல; தான் வேறல்ல என்று பாவிக்க வேண்டும் என்று கூறியது உண்மை தான்! ஆனால் சிவம் எது என்று சரியாகத் தெரிந்தால் தானே அதனோடு ஒன்றி நிற்க முடியும்?” முருகப்பெருமான்: “ஆமாம்! அது உண்மை தான். சிக்கலே இங்கே

சைவக் கேள்விச் சிற்றம்பலம் பகுதி 13

-    செந்தமிழ் வேள்விச்சதுரர் சிற்றம்பல அன்பர்: ஐயா! மீமாம்சை, சாங்கியம், யோகம் என்ற வடவேத சார தத்துவ மதங்களைப் பற்றித் தெளிவாக்கினீர்கள். வடவேத தத்துவ தரிசனங்கள் மொத்தம் ஐந்து என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எஞ்சிய இரண்டு யாவை? அறிவாகரர்: நல்ல கேள்வி. எஞ்சிய இரண்டும் நியாயம், வைசேடிகம் என்பனவாம். சாங்கியத்திற்கும் யோகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போலவே நியாயத்திற்கும் வைசேடிகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே இரண்டையும் சேர்த்து நியாய வைசேடிகம் என்றே கூறுவர்.

Top