தினமும் ஒரு திருமுறைப் பாடல் செய்திகள் - முதல் திருமுறை பதிகம் எண் : 47 பதிகம் : திருச்சிரபுரம் பாடல் எண் : 5 புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானைதன்னை கரமெடுத்துத் தோலுரித்த காரண மாவதென்னே மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ் சிரமெடுத்த கைகள் கூப்புஞ் சிரபுர மேயவனே.