You are here
Home > செய்திகள்

கல்வெட்டுகளைக் காப்பாற்றுங்கள்

2011 ஜனவரி மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் "நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா?" என்று நல்லதொரு கேள்வியை எழுப்பி இருந்தது. 2009ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) கல்வெட்டாய்வாளர், தொல்லியல் அதிகாரி, நினைவுச் சின்னப் பாதுகாப்பாளர் போன்ற 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு துறைகளிலும் முதுகலைப் பட்டப் படிப்பையும், கல்வெட்டியலில் பட்டயப் படிப்பையும்

20,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது தமிழ்

முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் இயல், இசை, நாடகம் எனும் மூன்று பெரும் பிரிவுகள் கொண்ட முதல் தமிழ்ச்சங்கம் கி.மு. 18,000 ஆண்டில் தோன்றியது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது! ஆகவே தமிழ் மொழியின் தொன்மை 20,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். எத்தனை வருடம் தமிழ்ச் சங்கங்கள் நடந்தன என்று பதிவு செய்திருக்கிறார்கள் பழந்தமிழர்கள். இந்துமாக் கடல் உருவாவதற்கு முன்பே இருந்தது தமிழ் மொழி. தற்போது வழக்கத்தில் உள்ள கருநாடக இசையைக் காட்டிலும் மிக மிகப் பழைமையானதும் சிறப்பு வாய்ந்ததும்

புறநானூறு தொடர் சொற்பொழிவு 200வது பாடல்

வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் புறநானூறு தொடர் சொற்பொழிவு ஏறத்தாழ 11 வருடங்கள் 4 மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது இதுவரை யாரும் செய்திடாத அரும்பெரும் சாதனை என்று தமிழ் கூறும் நல்லுலகத்தார் போற்றுவர் என்பது மறுக்கொணா உண்மை. அந்த அற்புத ஞானவேள்வியிலே தற்போது ஒரு முக்கிய பகுதியை வந்தடைந்துள்ளோம். 11 வருடங்கள் கழித்து 200வது பாடலை எட்டியுள்ளோம். இது ஒரு சிறந்த நிகழ்வு ஆகையால் இச்சிறப்பிற்கு சிறப்பு சேர்க்க

தமிழ் நாட்காட்டி 2021

தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த  தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை –

10 ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா

சேந்தன் அன்பர்களே!! வணக்கம். இறைவன் திருவருளாலும் குருவருளாலும் இந்த ஆண்டு (2021) வள்ளிமலை படிவிழா மற்றும் மலைவல விழா ஜனவரி 9 மற்றும் 10 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அவ்விழாவிற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். அனைவரும் வருக! அருள்நலம் பெறுக!! (மேலதிக விவரங்களுக்கு அழைப்பிதழை காணவும்) இங்ஙனம் தெய்வத்தமிழ் அறக்கட்டளை உறுப்பினர்.

தமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்

உ தமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும் ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் Buy this Book       தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு இதுவரை 120 நூல்களை இயற்றியருளியவர் நம் ஞானதேசிகர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள். வழிபாட்டு நூல்கள், நாடகம், செய்முறைப் பயிற்சி நூல்கள், வேத நூல்கள், ஆகம நூல்கள், வாழ்வியல் சடங்குகள், கோவில் விழாக்கள், பண்டிகைகள், தனித்தமிழ் நாட்காட்டி, பஞ்சாங்கம், போற்றித்திரட்டு, ஆங்கில உரைகள், மறுப்பு நூல்கள், என

கார்த்திகை தீபத்திருநாள் சிறப்புச் சொற்பொழிவு

வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் கார்த்திகை தீபத்திருநாள் சிறப்புச் சொற்பொழிவாக கற்பனை களஞ்சிய நம்பி துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய "சோணசைல மாலை" என்ற தலைப்பில் நவம்பர்  28ஆம் தேதி சனிக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணி அளவில் சொற்பொழிவு ஆற்ற உள்ளார்.   தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.

12 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

12 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா 15-11-2020 முதல் 20-11-2020 வரை முருகு தமிழ் மெய்யன்பர்களே! வணக்கம். மேற்படி இவ்வமைப்பு நடத்தும் தனது 12 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு விழா உலகையே அலைக்கழிக்கும் கொடிய கொள்ளை நோய்க்கிருமி கொரோனாவின் இரண்டாம் அதிவேகப் பரவல் காரணமாக அரசு வழிகாட்டுதலின் படி மிக எளிமையாக நிகழ்நிரலின்படி நடைபெறும். அன்பர்கள் வீட்டிலிருந்தபடியே வான்வெளி இணைப்பு செயலி (Zoom) மற்றும் (YouTube) https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA

Top