You are here
Home > செய்திகள் > சைவ சித்தாந்தம் என்னும் செம்பொருட் துணிவு நூல் வெளியீட்டு விழா – 01/05/2024

சைவ சித்தாந்தம் என்னும் செம்பொருட் துணிவு நூல் வெளியீட்டு விழா – 01/05/2024

சைவ சித்தாந்தம் என்னும் செம்பொருட் துணிவு நூல் வெளியீட்டு விழா – 01/05/2024

முதுமுனைவர். மு.பெ.ச ஐயா அவர்கள் அருளியுள்ள சைவ சித்தாந்தம் என்னும் செம்பொருட் துணிவு நூல் வெளியீட்டு விழா நாள்: மே 1, 2024 அறிவன் (புதன்) கிழமை, மாலை 5.00 மணிக்கு விழா தொடக்கம்.

முத்தமிழ் மெய்யன்பர்களுக்கு!

வணக்கம். தமிழர்களின் தனிப் பெருஞ் சிறப்பு தத்துவக் கொள்கை சைவ சித்தாந்தம். இதற்கு ஈடு இணை இல்லா ஒரு பேருரை உண்டு; பெயர் “திராவிட மாபாடியம்”. இந்தப் பெயரே இத்தத்துவக் கொள்கை திராவிடர்களுக்குச் சொந்தமானது என்பதைச் சான்று காட்டுகிறது.

“Saiva Siddhantha is the choicest product of Dravidian intellect” என்று மேலைநாட்டு மெய்ப்பொருளியல் முனைவர். G.U. போப் அவர்களும் இதை உறுதி செய்கிறார்.

திராவிடர்களாகிய தமிழர்தம் மெய்ப்பொருளியலுக்கு சைவ சித்தாந்தம் என்ற வடமொழிச் சொல் எப்படி வந்தது? அது ஒரு வரலாற்றுப்பிழை; இன்று வெளிவரும் நூலில் கண்டு தெளியலாம். 10-ஆம் நூற்றாண்டிற்கு முன் அதன் தமிழ்ப்பெயர் “செம்பொருட் துணிவு” ; இதை தித்திக்கும் தீந்தமிழ் திருமுறைப் பறை சாற்றுகிறது.

ஆக, தமிழர்தம் பழம்பெரும் சிந்தனைகள் இன்றைய விஞ்ஞானக் கொள்கைகளில் பட்டை தீட்டி எளிய முறையில் உளம் கொள்ளத்தக்க வகையில் மாணவர்களும் பயன் பெற செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களால் எழுதி அருளப்பட்ட நூலே இங்கு வெளியிடப்படும் இந்த நூலின் பெருமையாகும்.

இத்தகைய பெருமை பிறங்கும் இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு ஆர்வமுள்ள தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். விழா அழைப்பிதழ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இங்ஙனம் தெய்வத்தமிழ் அறக்கட்டளை

Buy Saiva Siddhantham Book

Buy Saiva Siddhantham Book

Top