தமிழ் எப்படி வளர்ந்தது? தண்ணீர் ஊற்றியா? தழை உரம்? பாஸ்பேட்? இல்லை. புலவர்களுக்குத் தமிழ் இன்பம் அறிந்த மன்னர்கள் அவ்வப்போது அளித்த பரிசில்களால்! ஒருவன் பெற்ற பரிசிலைப் பார்த்து இன்னொரு புலவன் தமிழ் ஆற்றல்களை எல்லாம் நாடோறும் வளர்த்து வளர்த்து மன்னர்களிடம் சென்று திறங்காட்டி, உரங்காட்டி, தெவிட்டாத இனிமை காட்டிப் பெற்ற பரிசில்களால் வளர்ந்தது தமிழ்! சும்மா ஓர் எண்ணம் தூண்ட புலவர்கள் என்னென்ன வெல்லாம் பரிசில்களைப் பெற்றார்கள் என்று இலக்கியங்களில்
செய்திகள்
இடக்கும் மடக்கும் (லொள்ளு)
நம் வாழ்க்கையிலேயே பலர் இடக்கு மடக்காகப் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். திரைப்படத்திலே கூட ஒரு நடிகரும் மற்றொரு நகைச்சுவை நடிகரும் தம்முள் இடக்கும் மடக்குமாகப் பேசுவதைக் கேட்டு ரசிக்கிறோம். இதை லொள்ளு என்று தற்கால இளவட்டங்கள் தொட்டிலிட்டுப் பெயர் வைத்திருக்கின்றனர். பேர் தான் புதிதே தவிர தமிழ் இலக்கியங்களில் மிகப் பழங்காலத்தில் இருந்து இது வந்து கொண்டிருக்கிறது. வேண்டுமென்றே ஒருவரை இடக்காகக் கேள்வி கேட்க, கேட்டவரையே மடக்குகிற வகையில் புலவர் பதில்
நற்றமிழும் நகைச்சுவையும்
நகைச்சுவை மட்டும் இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்று மகாத்மா காந்தி சொன்னார்; ஓஷோ சொன்னார் இன்னும் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்றெல்லாம் நகைச்சுவைக்கு ஓட்டு சேகரித்து தான் நகைச்சுவையை நாம் வாழ வைக்க வேண்டும் என்றால் முதலில் நகைச்சுவை தற்கொலை செய்து கொள்ளும். நகைச்சுவை சிபாரிசு செய்து வருவதில்லை; இயல்பாக வரும். அதனால் தான் சிரிப்பை அடக்க முடியவில்லை, சிரித்து விட்டேன் என்று சொல்வதை அவரவர்
மேலோரும் கீழோரும்
எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் எல்லாம் புரிவதில்லை. பழகிய ஒன்றை பழக்கத்தின் காரணமாகவே அது அப்படித்தான் என்று ஏற்றுக் கொள்ளப் பழகி விடுகிறோம். அதில் ஒன்று தான் மழை. வந்தால் மழை; வராவிட்டால் வசவு. அவ்வளவு தான், மழையைப் பொறுத்த வரை நம் எதிர்வினை. யாரும் மழை எப்படி வருகிறது என்பது பற்றி ஆய்ந்து அறிய முயலுவதே இல்லை. இதே மாதிரி தான் நானும் இருந்து வந்தேன்; எதுவரை தெரியுமா? மின் வாரியத்தில்
தெரிந்த நுனியும் தெரியாத ஆழமும்
கடல் பயணம் நம் எல்லோருக்கும் பழக்கமானதல்ல, நாம் எல்லோரும் கவலையே படாமல் பயணம் செய்வது பிறவிக் கடல் என்று வைத்துக் கொள்ளுங்கள்! காரணம், அந்தக் கவலையைப் பட நமக்காக இறைவன் இருக்கிறான்! அதை அவன் பார்த்துக் கொள்வான்! இப்ப, கண்ணால் பார்க்கும் கடல் பயணத்திற்கு வந்து விடுவோம். கடல் பயணத்தில் திடீரென சற்று தூரத்தில் ஒரு பனிக்கட்டி மிதந்து கொண்டிருப்பதைத் துருவப் பகுதிகளில் காணலாம். அப்படிக் கண்டால் கப்பலை மிகுந்த எச்சரிக்கையாக
திருமாலும் சிசி டிவியும்
தமிழ்ப் புலவர்களின் கற்பனைக்கு ஈடாக உலகின் வேறெந்த மொழிப் புலவனின் கற்பனையையும் கூற முடியாது. ஒன்று புலவனின் கற்பனை வளம்; மற்றது தண்டமிழ்த் தனி வளம். தமிழ் நாட்டில் திருவீழிமிழலை என்று ஒரு தலம். அங்கே திருமால் சிவபெருமானை வணங்கிப் பூசை செய்தாராம்! சும்மா ஒரு நேர்த்திக் கடன்! வேறெவரிடமும் இல்லாத மிக உயர்ந்த ஆயுதமான சக்ராயுதம் வேண்டி செய்த பூசை! அரிய ஆயுதம் வேண்டுமென்றால் பெரிய பூவால் தானே பூசை
வரலாற்றில் மறைந்த வேலையாள் (தொடர்ச்சி – பாகம் 2)
பணியாளாகிய ஊட்டுவான் பாடலிபுத்திர நகரிலிருந்து புறப்பட வேண்டும். எப்போது? அதையும் அப்பர் குறிப்பாலேயே கூறினார் என்று பின்னொரு பாடலில் குறிப்பிடுகிறார் சேக்கிழார். அதாவது பகலில் செல்ல வேண்டாம்! சமண் சமய தலை நகரமான பாடலிபுத்திரத்தில் மக்கள் நடமாட்டம் நிறைய இருக்கும். எனவே இந்த சமண் சமய மடத்திலிருந்து ஒரு சமையற்காரர் எங்கே போய்க் கொண்டிருக்கிறார் என்று எல்லோரும் கவனிப்பார்கள்! எனவே யாராவது பின் தொடர்ந்தால் சமண மடத்திலிருந்து சைவ மதத்திற்கு
வரலாற்றில் மறைந்த வேலையாள்!!
உண்மையில் ஒருவர்க்கு வேலையாள் அமைவது என்பது உயர்ந்த வரம்; எல்லோருக்கும் அமையாது! சபாபதி என்று ஒரு பழங்கால திரைப்படம்; முதலாளி சோடா உடைத்துக் கொடு என்பார்; உடனே சபாபதி சோடா பாட்டிலை உடைத்து நீட்டுவான். இந்தக் கொடுமையை என்ன சொல்ல! ஆனால் திரைப்படம் முழுவதும் முதலாளி அந்த வேலையாளொடு தான் உழலுவான்! அந்தப் படமே அந்த வேலையாளின் முட்டாள்தன புராணம் தான்! இப்படி இருந்தும் அந்த வேலையாளை முதலாளி இறுதிவரை நீக்கவில்லை.
நயத்தமிழ் செய்த நன்மை
எதையும் நயமாகச் சொல்ல வேண்டும்; சொன்னால் அது கேட்பவருக்கு அர்த்தத்தையும் அளிக்கும்; ஆனந்தத்தையும் அளிக்கும். அதனால் நடக்காததையும் நடக்குவிக்கலாம். மனைவி இட்லியைப் பரிமாறுகிறாள்; கணவன் சொல்கிறான். "அட! தலையில் வைக்க வேண்டியதை இலையில் வைச்சுட்டியே!" என்கிறான். மனைவி என்னங்க என்று அலங்க மலங்கக் கேட்கிறாள். "ஒண்ணுமில்லை, இட்டிலி மல்லிப்பூ மாதிரி இருக்கே, அதைச் சொன்னேன்!" என்கிறான் கணவன். மனம் மகிழ்ந்து போன மனைவி இலையில் இன்னும் இரண்டு இட்டிலி வைக்கிறாள்.
கூத்தில் நடந்த கூத்து
"எடுத்த காரியங்களில் எல்லாம் அர்ப்பணிப்புடன் பணி ஆற்ற வேண்டும்.!" என்று பெரியோர் கூறுவது மரபு. இந்தப் பொன்மொழியை எழுதி தன் அறையின் நுழைவுக் கதவில் பதித்து வைத்திருந்தார் ஓர் அரசு அதிகாரி. அவரிடம் ஒருவர் மனுவோடு முறையிட்டார்: "ரொம்ப நாளா அலையறேங்க!" அதிகாரி சொன்னார்: "நுழைவுக் கதவை மறுபடியும் போய் பார்த்துவிட்டு வா! "மனுதாரர் பார்த்து விட்டு வந்து அந்த பொன்மொழியைச் சொன்னார். அப்புறம்! 'அர்ப்பணிப்பு' இல்லாம வேலை எப்படி நடக்கும்? என்று