You are here
Home > செய்திகள் (Page 7)

செவிமடுப்போம் செந்தமிழ் நயம்!

சிறியேன் சிறுவயதிலிருந்தே ஒரு பெருமை குறித்து மார்தட்டிக் கொள்வது உண்டு. அது நான் பிறந்த வேலூர் பற்றியது. உலகில் எந்நாட்டிலும் மண்ணில் ஏதேதோ விளைய, இங்கு மட்டும் மண்ணில் தமிழ் முருகனின் தனிவேல் முளைக்கிறதாம். சிறுபாணாற்றுப்படையில், திறல்வேல் நுதியிற் பூத்த கேணி விறல்வேல் வென்றி வேலூர்.' - (சிறுபாணாற்றுப்படை வரி 172 - 173) இத்தகைய சங்கப்பாட்டில் இடம் பெற்ற பெருமையுடைய வேலூரில் ஓர் ஆறு ஓடுகிறது; பெயர் பாலாறு. இன்று இது ஓடிய அடையாளத்துடன்

செம்மலீர் ! கேளீர்! செந்தமிழ் நயத்தை! பெரியபுராணம் – திருக்குறிப்புத் தொண்டர்

     இயற்கை எவ்வளவு நாள் பொறுமையோடு இருக்கும்? குப்பையைக் கொட்டிக் கொண்டே இருந்தால் குவலயம் பொறுக்குமா? போதும் நிறுத்து என்று மனித இனத்தை நெட்டித் தள்ளி முட்டி தட்டி வீட்டில் முடக்கக் கோரேனா என்று இயற்கை அனுப்பி வைத்தது தான் கொரோனா!      இன்று இயற்கை நிம்மதியாக சுவாசிக்கிறது. கங்கை, யமுனை போன்ற பெருநதிகள் நிர்மலமாக ஓடுகின்றன. காற்றில் மாசு குறைந்து மூச்சுத் திணறல் நின்றிருக்கிறது இதெல்லாம் செய்திகள்!  

அடியவர் குழாத்திற்கு மு.பெ.சத்தியவேல் முருகனின் அருந்தமிழ்ப் பகிர்வு பெரியபுராணம் – முருகநாயனார்

     இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று ஒளவையார் கூறியபோது யாரும் கேட்கவில்லை. இப்போது ஒரு கிருமி சொன்னால் உலகமே கேட்டு தனிமையில் முடங்கிக் கிடக்கிறது. ஒளவையார் சொன்ன தனிமை இனிமை உடையது. கிருமி துரத்தும் தனிமை இனிமையானதல்ல. விடிவிற்கு ஏங்குகிறோம். தனிமைக்கு இனிமையை அளிக்கக் கூடியது தமிழ் தான்! 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்பர். எனவே இந்தத் தனிமையை இனிமையாக்கப் பெரியபுராணச் சேக்கிழாருடன் பொழுது போக்கிக்

திருச்சாட்டியக்குடி

வணக்கம்  கொரோனா நோயின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் உலக மக்களின் நலனுக்காக எந்த திருமுறைப் பதிகத்தை ஓதுவது என்று எண்ணி கையறு நிலையில் நின்ற நமக்கு கிடைத்த வரமாக நமது குருநாதர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் அளித்த அறிவிப்பு.  ஓதி நலம் பெறுக.

சாட்டியக்குடி கோயில்

வணக்கம் ஊர் பெயர் - "சாட்டியக்குடி"; கோயில் பெயர் - "ஏழ் இருக்கை". இத்தலம் ஓர் வைப்புத்தலம். இத்தலத்தில் வந்து வணங்கிய தீக்கடவுளுக்கு அத்தீக்கடவுளை இயக்கும் "தீயினில் மூன்றாய்த் திகழ்ந்திடும்" சிவனே அவ்வடிவிலேயே அருள் புரிந்தான் என்பதால் இத்தலத்து சிவத்திருக்கோலம் மேலே கிளைத்த இருமுகங்கள், முத்தீயைக் குறிக்கும். மூன்று கால்கள், தீ எழுந்து வீசுவதால் ஏழு கைகள் என்ற வடிவில் அமைந்திருக்கும். அதனால் இக்கோயிலுக்கு "ஏழ் இருக்கை " என்று பெயர் திருச்சாட்டியக்குடி எங்குள்ளது?? இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருக்கீழ்வேளூர்

ஸ்ரீ சிவ சுந்தர விநாயக தேவார பாராயண பக்த ஜன சபை – நூற்றாண்டு விழா

https://photos.app.goo.gl/PbTtCpAyu6r6GKYP8 தேவார பாராயண பக்த ஜன சபை நூற்றாண்டு விழா   முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் சொற்பொழிவு   தலைப்பு: திருஞானசம்பந்தரும் தமிழும்   நாள்/நேரம்: 19-1-2020 / 01:30pm   இடம்: பெருந்தலைவா் காமராஜா் திருமண மாளிகை, ராயபுரம், சென்னை  

இறப்பு விஞ்ஞானம் இனிய சைவ சித்தாந்தம் நூல்

உ இறப்பு – விஞ்ஞானம் – இனிய சைவ சித்தாந்தம் ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் ஆன்மி­க உலகிலும், தமிழ் உலகிலும் தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு வன்மையால் தடம் பதித்து, காலச்சுவட்டில் அடைவதற்கரிய தனித்த இடத்தைப் பெற்றுள்ளவர் இந்நூலாசிரியர். சமய நெறி நூல்களா, வழிபாட்டு முறை நூல்களா, பாட நூல்களா, சைவ சித்தாந்த ஆகம நுண் நூல்களா, மறுப்பு நூல்களா, ஆங்கில நூல்களா, என்று விதவிதமாக

தமிழ் நாட்காட்டி 2020

தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த  தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை –

Top