You are here
Home > செய்திகள் > தந்தையும் தனயனும் எழுதிய இருவேறு நூல்கள் வெளியீட்டு விழா

தந்தையும் தனயனும் எழுதிய இருவேறு நூல்கள் வெளியீட்டு விழா

“தந்தையும் தனயனும் எழுதிய இருவேறு நூல்கள்” வெளியீட்டு விழா

அன்பின் மிக்க அடியார் பெருமக்களுக்கு! வணக்கம்.

வரலாறு பல தந்தை மகன் இணையை பல்வேறு தளங்களில் களங்களில் கண்டுள்ளது, அவ்வகையில் இங்கு ஒரு இணை “இருவேறு நூல்கள்” எழுதி உள்ளார்கள். அவற்றை ஒரே நிகழ்வில் வெளியிடப்படுவதில் எங்கள் தெய்வத்தமிழ் அறக்கட்டளை பெருமிதம் கொள்கிறது.

நூல்கள்:
நூல் 1- “தில்லைக் கோயில் வரலாறும் வழக்குகளும்”
நூலாசிரியர்:  செந்தமிழ் வேள்விச் சதுரர்.
முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார்

நூல் 2- “அருணகிரிநாதரின் வேல் வகுப்பு – உரையுடன்”
நூலாசிரியர்: அருட்சொல்லரசு.ச.திருச்சுடர் நம்பி

இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு.திரு.P.K.சேகர்பாபு அவர்கள் தலைமை ஏற்று நூல்களை வெளியீடு செய்ய இருக்கிறார். மற்றும் நீதியரசர், அறநிலையத்துறை ஆணையர், நாடறிந்த அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

நாள்: ஜூலை 24, 2022 ஞாயிற்றுக் கிழமை

நேரம்: இந்திய நேரம் மாலை 4.20 மணி முதல்

இடம்: தேவநேயப் பாவாணர் அரங்கம், மாவட்ட மைய நூலகம், அண்ணா சாலை, சென்னை.

அனைவரும் அவசியம் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றோம்!!

விழாவின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம்.

book-release1

book-release2

 

book-release4

book-release3

Top