SRM பல்கலைக்கழகம் வழங்கும்
தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு –14 ஆம் குழாம் மாணவர் சேர்க்கை
வணக்கம்! பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடமொழியில் பாடல் பெறவில்லை. ஆனால் கோயிலுக்குள்ளே வேற்று மொழி வழிபாடு! இந்த நிலை மாற தமிழ் வழிபாட்டுப் பயிற்சி பெற வேண்டுமா? நமது கோயில்களில் நற்றமிழ் வழிபாடு நடைபெற வேண்டுமா?
தமிழக அரசு இந்து அறநிலையத்துறை உயர் நிலை ஆலோசனைக்குழு (Advisory Committee) வில் உறுப்பினராக உள்ள டாக்டர் பட்டம் பெற்ற செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும், SRM பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராயமும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டு சான்றிதழ்ப் படிப்பின் 14 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைத் தொடங்கி விட்டது.
பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப் பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும் ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக் கழகத்தால் சான்றிதழ் வழங்கப்படும்
சேர்க்கைக்கு உள்ள தகுதிகள் :-
- கல்வித் தகுதி 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் தமிழில் ஆர்வம்;
- வயது: 18 வயதிலிருந்து 70 வயது வரை
- ஆவணங்கள் தரவேண்டியவை:-
1) நிரப்பப்பட்ட விண்ணப்பம். DOWNLOAD FORM 2) கல்விச் சான்றிதழ் மின்நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம். எ.கா:மாற்றுச்சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ்) 3) ஆதார் கார்டு மின்நகல் 4) பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று,
- கல்விக் கட்டணம் (ஆண்டு முழுமைக்கும்) ரூ.15,000/- (ரூபாய் பதினைந்து ஆயிரம் மட்டும்) வரைவோலையாகவோ (DD) அல்லது Gpay ஆகவோ செலுத்தவேண்டும். இதில் புத்தகக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் அனைத்தும் அடங்கும்
- காசோலையோ அல்லது பணமோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, கட்டணம் செலுத்தியபின் அதற்கு உரிய இரசீது வழங்கப்படும்.
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஆவணங்களுடன் அணுக:-
திரு.மா.கருப்புசாமி, செயலாளர் தெய்வத்தமிழ் அறக்கட்டளை தொடர்பு எண்: 95000 45865
தபால்/ கூரியரில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, நேரில் தகுதிச்சான்றுகளை ஆய்ந்து மாணவர் சேர்க்கையானது நடைபெறும்.
- விண்ணப்பப் படிவங்களை தெய்வத்தமிழ் அறக்கட்டளை இணையங்களிலிருந்து (www.dheivamurasu.org, www.archakar.com)பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
- மாணவர் சேர்க்கைக்கு தொடர்பு கொள்ளும் நாள் : 01 – மே – 2025 வியாழக்கிழமை
ஏற்கெனவே பலநூறு மாணவர்கள் சான்றிதழ் பெற்று செந்தமிழ் ஆகம அந்தணர்களாக இல்லச் சடங்குகளிலும் கோயில் பூசைகளிலும் களம் கண்டு வருகிறார்கள் கோயில்களில் தமிழே கொலுவிருக்க, வாழ்வியல் சடங்குகளில் வண்டமிழே வழிகாட்ட அரிதில் அமைந்துள்ள அருந்தமிழ் வாய்ப்பு! இப்பயிற்சியைப்பயன் கொள்ள விரையுங்கள்!
அன்புடன்
தெய்வத்தமிழ்அறக்கட்டளை
சென்னை
(பின்குறிப்பு: அன்பர்கள் இந்தத் தகவலை, எந்த ஒரு மாற்றமும் செய்யாமல், தங்களுக்குத் தொடர்புள்ள மற்ற வாட்ஸாப் குழுக்களிலோ அல்லது ஈமெயிலிலோ அல்லது மற்றைய சமூக ஊடகங்களிலோ பதிவேற்றம் செய்யலாம்.)