தமிழ் வழிபாட்டுத் (தபால்) தலைமகனுக்குப் பாராட்டு விழா
அன்பர்களே வணக்கம்! நமது குருபிரான் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களது மலேசிய “தபால் தலை” அந்நாட்டில் வெளியிடப்பட்ட முக்கிய வரலாற்று நிகழ்வு என்பது தமிழர்களாகிய நமக்கெல்லாம் மிகப்பெரிய மகிழ்ச்சி. அதனைக் கொண்டாடும் விதமாக ஒரு பாராட்டு விழா நடத்த தெய்வத்தமிழ் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அந்நிகழ்வின் அழைப்பிதழினை இத்துடன் இணைத்துள்ளோம். இக்கொண்டாட்டம் என்பது அவரோடு தமிழ் வழிப்பாட்டில் பயணித்தவர்கள், ஆதரவாளர்கள், பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் பெருமை எனவே அனைவரும் திரளாக வந்திருந்து இந்நிகழ்வை
செந்தமிழ் வழிபாட்டுப் பணியைப் பாராட்டி தபால் தலை
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை உயர்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் வள்ளலார் 200 விழாக் குழுவின் உறுப்பினரும், எங்கள் தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் நிறுவுனரும் இயக்குநருமான செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர். மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் 40 ஆண்டு கால செந்தமிழ் வழிபாட்டுப் பணியைப் பாராட்டி போற்றும் விதமாக, மலேசிய அன்பர்கள் அண்மையில் 16-09-2023 அன்று பத்துமலை முருகன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது தமிழ்ச்சமய மாநாட்டில், அவரது “தபால் தலை” ஒன்றை வெளியிட்டுள்ளனர் என்ற செய்தியை மகிழ்வோடு
தமிழ்ச்சமய மாநாடு 2023
பத்துமலையில் நான்காவது தமிழ்ச் சமய மாநாடு ; தமிழர்கள் பண்பாட்டு உடையில் திரண்டு வாருங்கள் https://nambikkai.com.my/detail/18012 பத்துமலை : பத்துமலையில் நடைபெறவிருக்கும் நான்காவது தமிழ்ச் சமய மாநாட்டுக்குத் தமிழர்கள் பாரம்பரிய உடையில் திரண்டு வருமாறு மாநாட்டு ஒருங்கினைப்பாளர் தலைவர் வீ. பாலமுருகன் கூறினார். மலேசியத் தமிழ்ச் சமயப் பேரவையின் ஏற்பாட்டிலான இம்மாநாடு வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பத்துமலை திருமுருகன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழால்,
சுந்தரர் விழா அழைப்பிதழ்
திருஞானசம்பந்தர் விழா
தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு – Tamizh Archakar Training
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன விண்ணப்பப் படிவம் – இங்கே பதிவிறக்கம் செய்க. Click here to Download Application Form தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு - 12ஆம் குழாம் மாணவர் சேர்க்கை வணக்கம்! பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடமொழியில் பாடல் பெறவில்லை. ஆனால் கோயிலுக்குள்ளே வேற்று மொழி வழிபாடு! இந்த நிலை மாற தமிழ் வழிபாட்டுப் பயிற்சி பெற வேண்டுமா? நமது கோயில்களில் நற்றமிழ் வழிபாடு
வரலாற்றில் மறைந்த வேலையாள் – மு பெ சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு
தமிழ் நாட்காட்டி 2023
தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை –
12ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா
சீலம் நிறைந்த செம்மல்களே! வள்ளிமணாளன் திருவருளாலும், வாரியார் சுவாமிகள் குருவருளாலும், திருப்புகழ் சிவம் வேலூர்.மு.பெருமாள் அவர்கள் நல்ஆசியாலும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை நடத்தும் "தமிழர் திருநாள் ஆசிபெறும் 12ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா வருகின்ற 06-01-2023 வெள்ளிக் கிழமை மற்றும் 07-01-2023 காரி(சனி)க் கிழமை அன்று நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாண்டு பொங்கல் தொடங்கி அன்பர்கள்