Events Search and Views Navigation
November 2024
December 2024
34 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
https://www.youtube.com/watch?v=MeJqtgrjfFw ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் நமது குருபிரான் ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 34ம் ஆண்டு முற்றோதல் விழாவை திருவருள் நலத்தால் நடாத்த இருக்கின்றன. இவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றாகவும் அதிலும் நான்காம் (4) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் இணைத்துள்ளேன். Download PDF விழாவின் முக்கிய நிகழ்வுகள்: 1. 4–ஆம் தந்திர முற்றோதல் 2. திருமந்திரம் – நான்காம் தந்திரம் கருத்தரங்கம் 3. திருமந்திர சக்கரங்கள் உருவாக்க அரங்கம் 4. திருமுறை இசைஅரங்கம் 5. பள்ளி சிறுவர்கட்கு திருமந்திர மனன போட்டி பரிசரங்கம் 6. திருமந்திர தமிழிசை அரங்கம்…
புலவரேறு ந. ரா. முருகவேள் ஐயா நூற்றாண்டு விழா – குருபிரான் அருட்பொழிவு !
https://www.youtube.com/watch?v=jKGq9rmtcIc திருச்சிற்றம்பலம் “திருக்கோயில்” இதழாசிரியர் செந்தமிழ்ச் சைவமணி சித்தாந்தப் புலவர்மணி தருமை ஆதீனத் தமிழ்ப்புலவர் புலவரேறு ந. ரா. முருகவேள் ஐயா அவர்களின் நூற்றாண்டு விழா (1924-2024) இன்றைய தினம் (29-12-2024) அருள்மிகு முத்தையா மணிவிழா மண்டபம், தருமபுர ஆதீன சமயப் பிரச்சார நிலையம், வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயர் நகர், சென்னையில் தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றத்தினரால் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 27 – ஆவது குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் சான்றோர் பெருமக்கள் மற்றும் அடியார்கள் பங்கேற்புகளுடன் நூற்றாண்டு விழா மலர் மற்றும் புலவரேறு அவர்கள் அருளிய இருபா இருபஃது உரை நூல் வெளியீட்டுடன் சிறப்பாக நடைபெற்றது. அப்போது புலவரேறு அவர்களை…
January 2025
14ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா
முருக நேய அன்பர்களே! வள்ளிமணாளன் திருவருளாலும், வாரியார் சுவாமிகள் குருவருளாலும், திருப்புகழ் சிவம் வேலூர்.மு.பெருமாள் அவர்கள் நல்ஆசியாலும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை நடத்தும் “தமிழர் திருநாள் ஆசிபெறும் 14ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா வருகின்ற 04-01-2025 காரி(சனி)க் கிழமை மற்றும் 05-01-2025 ஞாயிற்றுக் கிழமை அன்று நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாண்டு பொங்கல் தொடங்கி அன்பர்கள் அனைவரின் வாழ்விலும் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்க வள்ளியம்மையையும் வள்ளிமணாளனையும் வழிபட்டு அருள்நலம் பெற அன்போடு அழைக்கின்றோம். இடம்: பெனுகொண்ட ரெட்டி திருமண மண்டபம், வள்ளிமலை தேரடி அருகில், வள்ளிமலை. Google Map : https://goo.gl/maps/LwDE4AQxcH6ZvgTX9 Download Vallimalai Invitation…
திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவிற்கு
ஸ்ரீ பஞ்சமுக லிங்கேஸ்வரர் திருக்கோவில் இறைவன் திருவருளாம் குருவருளால் பன்னிரண்டாம் குழு மாணவர்கள் மிகச் சிறப்பாக ஆற்றிய கடவுள் மங்கலமாம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவிற்கு குருபிரான் அவர்கள் அடியார் திருக்கூட்டத்தினர்களுடன் எழுந்தருளி ஆசி வழங்கிய நிகழ்வு அனைவரையும் நெகிழ்வுறச் செய்தது. சிறப்பாக திருப்பணி மற்றும் வேள்விச்சாலைப் பணிகளை ஆற்றிய அனைத்து அடியார்களுக்கும் நன்றி !
February 2025
March 2025
சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி
தெய்வச்சேக்கிழார்_திருவடிகள் போற்றி ! போற்றி ! 🌹🌸🦚🌿🌸🌸🪷🌹🌿🦚🦚🌻 மாதந்தோறும் ஞான வேள்வி , 🙏🌹🪷🪷🌸🌸🌸🌻🦚🌿🌻🌿 பூசம் நட்சத்திரத்தில் மாத குருபூசை,. வழிபாடு ! 🌹🪷🌸🌻🌻🦚🌿🪷🌸🌻🦚🌻 நாள் : 10-03-2025, திங்கட் கிழமை இடம் : தெய்வச் சேக்கிழார் திருக்கோயில், குன்றத்தூர். நேரம் : காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை. நிகழ்ச்சி நிரல் : பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம், தீபாராதனை., போற்றி வழிபாடு, திருமுறை இன்னிசை, சிறப்புச் சொற்பொழிவு, அன்னம் பாலிப்பு. திருமுறை இன்னிசை : திருமதி ரேணுகா வாசுதேவன் . மிருதங்கம்: சிவத்திரு இராமலிங்கம் , வயலின் : சிவத்திரு சிவக்குமார் . சிறப்புச் சொற்பொழிவு : (நேரலையில்) செந்தமிழ் வேள்விச் சதுரர், முது முனைவர், ஆகம…
முருகன் பள்ளியெழுச்சி
https://www.youtube.com/watch?v=7gJpt2S1qjo https://youtu.be/7gJpt2S1qjo?si=cLQut1_WKXWsr4xb