கார்த்திகை தீப வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:7) திருவண்ணாமலை - கார்த்திகை தீபம் ஆகியவற்றின் தொடர்புகளை சங்க இலக்கியத்தாலும், தருக்க முறையாலும், அருளாளர்கள் உரைகளாலும், பிற்கால இலக்கியத்தாலும், விஞ்ஞான கூற்றுகளாலும் சான்று காட்டி விளக்குகிறது இந்நூல். சங்க காலத்திற்கு முன்னிருந்து தொடர்ந்து வரும் இத்தொன்மை மிக்க தமிழர் வழிபாட்டை தமிழால் ஆற்றுவது எப்படி என்று விளக்குகிறது இந்நூல். நூல்: ரூ. 40/- Buy this Book Read as Ebook in Amazon Kindle பக்கங்கள்:
செய்திகள்
மந்தார விநாயகர் பைந்தமிழ்ப் பதிகம்
உ மந்தார விநாயகர் பைந்தமிழ்ப் பதிகம் பிள்ளையார்ப்பித்தன் இரா.உமாபதி முத்தமிழ் அடைவை முற்படு கிரியில் முற்பட வெழுதிய முதல்வ! சத்திநி பாதம் மலபரி பாகம் இருவினை ஒப்பினைத் தந்து தத்துவக் கூட்டம் அனைத்தையுங் கடக்கத் தமியனேற்(கு) அருள்வையோ! ஞான வித்தக மூர்த்தி! விமல! மந்தார விநாயக! விரைகழல் சரணே! 1 இருந்தமிழ் மொழிக்கே உரிய ஓங்கார எழுத்(து)அதன் வரிவடி வோடு பெருங்குரல் ஓசைப் பிளிறலுங் கொண்ட பிராணியாம் மதகரி முகத்தாய்! கரைந்துநெஞ்(சு) உருகி உனைத்தொழா(து) உவரி கடைந்திட வந்தநஞ்(சு) அருந்தி விருந்(து) அமிழ்(து) அளித்தோன் மைந்த! மந்தார விநாயக! விரைகழல் சரணே! 2 நற்றமிழ் முனிவன் அகத்தியன்
பொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா
கந்த சஷ்டி பெருவிழா
கந்த சஷ்டி பெருவிழா ஆண்டு தோறும் நடப்பதுபோல், இவ்வாண்டும் கந்த சஷ்டி பெருவிழாவினை முன்னிட்டு ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி முதல் தெரு, எண்.6 தெய்வத்திரு.சிவப்பிரகாசம் அரங்கில் 20.10.2017 முதல் 25.10.2017 வரை மாலை 5.00 மணி அளவில் முருகன் திருவுருவத்திற்கு வழிபாட்டினை தமிழ் முறையில் கூட்டு வழிபாடாக ஆற்றியும், அதையொட்டி, செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் ஆசியாலும் வழிநடத்துதலின் பேரிலும் முருகன் புகழை பாடிப் பரவிய அடியார்களையும் அவர்கள்
கௌரி நோன்பு வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:6)
நவராத்திரி வழிபாடு பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 3)
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:4)
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள், உள்ளுறை
அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு தொடக்க விழா
செந்தமிழில் மந்திரங்களா? வண்டமிழில் சடங்குகளா? என்று வினவியவர்கள் வியக்கும் வண்ணம் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பேராயமும், தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து அளித்து வரும் ஓராண்டு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு வெற்றிகரமாக ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அருட்டமிழ் உணர்வு பொங்க சேர்ந்துள்ள ஏழாம் குழாம் மாணவர்கள் புத்தெழுச்சி பெற தொடக்க விழா, அழைப்பிதழில் (இணைக்கப்பட்டுள்ளது) உள்ளபடி நடைபெற உள்ளது. தொடக்க விழா அழைப்பிதழ்