செய்திகள்நிகழ்வுகள்

கந்த சஷ்டி பெருவிழா

கந்த சஷ்டி பெருவிழா

ஆண்டு தோறும் நடப்பதுபோல், இவ்வாண்டும் கந்த சஷ்டி பெருவிழாவினை முன்னிட்டு ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி முதல் தெரு, எண்.6 தெய்வத்திரு.சிவப்பிரகாசம் அரங்கில் 20.10.2017 முதல் 25.10.2017 வரை மாலை 5.00 மணி அளவில் முருகன் திருவுருவத்திற்கு வழிபாட்டினை தமிழ் முறையில் கூட்டு வழிபாடாக ஆற்றியும், அதையொட்டி,  செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்  அவர்களின் ஆசியாலும் வழிநடத்துதலின் பேரிலும் முருகன் புகழை பாடிப் பரவிய அடியார்களையும் அவர்கள் இயற்றிய நூல்களையும் கருத்துக்களையும் சிந்திக்கும் சொற்பொழிவுகள் நடைபெறயுள்ளன.

அன்பர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருள்நலம் பெற வேண்டுகிறோம்.

எஸ்.நாகரத்தினம்,
செயலாளர்,
ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம்.
சென்னை 600088