You are here
Home > 2016

மார்கழி பாராயணத் தொகுப்பு நூல்

மார்கழி பாராயண தொகுப்பு நூல்(download pdf) வணக்கம். மார்கழி மாதம் தொடங்கிய உடன் நாம் தேடுவது பாராயணத்திற்கு உதவியாக ஒரு நூல். அதில் எல்லா பாடல்களும் ஒருங்கே இருந்தால் ஏதுவாக இருக்கும் என்பது. அதற்காக இதோ நமது குருபிரான் முதுமுனைவர். மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் தந்தையார் திருப்புகழ் சிவம்.வேலூர்.மு.பெருமாள் அவர்கள் வழிகாட்டி உருவாக்கிய இந்த தொகுப்பு நூல் தங்கள் பயனுக்காக.

தீபாவளி வழிபடும் முறை

தீபாவளி vazhipadu

தமிழர்தம் பழம்பெரும் பண்டிகைகள்                                     பண்டிகை என்ற சொல்லைப் பண்டு+கை என பிரிக்கலாம். அதாவது பண்டைய கொள்கை, வழக்கு என்று பொருள். பண்டு தொட்டு வருகின்ற இறைவழிபாடு என தொடர்ந்து வருகின்றது. ஒவ்வொரு பண்டிகையும், ஒவ்வொரு காரணம் பற்றி ஒவ்வொரு தெய்வ மூர்த்தங்கள் (அதி தேவதைகள்) வழிபடப்படுகின்றன. நடைமுறையில் அவை கொண்டாடப்படுகின்றன. ஆனால் அவை கால மாற்றத்தால், அயல் இன அரசர்களால் கொள்கையளவில் மாற்றம் பெற்று இன்று பொருளற்ற பண்டிகையாய், வெறும்

வீசுகால் கோலம் – சிவத்திரு. திருச்சுடர்நம்பி அவர்களின் கண்டருளல் வருணனை

திருப்பரங்குன்றக் கோயிலின் தூணில்

  எற்றுக்கு விரைந்தீர்??!!! நல்லதொரு மாலை நேரத்தில், வானம் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை கண்குளிரக் கண்டு வணங்க வரும் முருகனடியார்களை பன்னீர் தெளித்து வரவேற்பது போல நீர் தெளித்து மண்ணையும் மனதையும் குளிர வைத்துக் கொண்டிருந்தது. தமிழின் மணமும் அதன் குணமும் கொண்டு என்றும் இளமையாய் இருக்கும் அந்த மலை கிழவோனாகிய முருகப்பெருமானை நாளும் வணங்கி தமிழால் வழிபட்டு, எல்லோரையும் வழிபட நெறிவகுத்து, நனிசொட்ட சொட்ட பாடியும் பேசியும் பரவிவரும் குருபிரான் ஒருவர் தன்

ஆறாம் குழாம் தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு – துவக்க விழா – 16 ஜூலை 2016

மாணவர்களுக்கு வணக்கம்! செந்தமிழில் மந்திரங்களா? வண்டமிழில் சடங்குகளா? என்று வினவியவர்கள் வியக்கும் வண்ணம் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பேராயமும், தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து அளித்து வரும் ஓராண்டு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு வெற்றிகரமாக ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அருட்டமிழ் உணர்வு பொங்க சேர்ந்துள்ள ஆறாம் குழாம் மாணவர்கள் புத்தெழுச்சி பெற தொடக்க விழா, அழைப்பிதழில் (இணைக்கப்பட்டுள்ளது) உள்ளபடி நடைபெற உள்ளது. வகுப்பு தொடர்பான மேலதிகத்தகவல்களுக்கு, மா.கருப்புசாமி ஒருங்கிணைப்பாளரை மின்னஞ்சலிலோ (அ) செல்பேசியிலோ 94440 79926 / 95000 45865 தொடர்பு கொள்ளவும்.

நமது குருபிரான் ஆற்ற உள்ள திருக்குட நன்னீராட்டு விழா – 9 ஜூலை முதல் 11 ஜூலை வரை

செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர், நமது குருபிரான் ஆற்ற உள்ள கடவுள் மங்கலம் (திருக்குட நன்னீராட்டு விழா) - 9 ஜூலை முதல் 11 ஜூலை வரை - இடம் சேக்காடு, சென்னை - 71.- அருள்மிகு வேதநாயகி உடனாய சோமநாதீச்சுரர் திருக்கோவில்.- அன்பர்கள் அனைவரும் வருக!... இறையருள் பெறுக!!!

Top