You are here
Home > அர்ச்சகர் பயிற்சி > தமிழ் அர்ச்சகர் படிப்பு மாணவர் சேர்க்கை – Tamizh Archakar Training

தமிழ் அர்ச்சகர் படிப்பு மாணவர் சேர்க்கை – Tamizh Archakar Training

SRM பல்கலைக்கழகம் வழங்கும்
தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு 
11 ஆம் குழாம் (2022-23)

இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நிறைவுற்றது. 

 

 

வணக்கம்! பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடமொழியில் பாடல் பெறவில்லை. ஆனால் கோயிலுக்குள்ளே வேற்று மொழி வழிபாடு! இந்த நிலை மாற தமிழ் வழிபாட்டுப் பயிற்சி பெற வேண்டுமா? நமது கோயில்களில் நற்றமிழ் வழிபாடு நடைபெற வேண்டுமா?

தமிழக அரசு இந்து அறநிலையத்துறை உயர் நிலை ஆலோசனைக்குழு (Advisory Committee) வில் உறுப்பினராக உள்ள டாக்டர் பட்டம் பெற்ற செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும், SRM பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராயமும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டு சான்றிதழ்ப் படிப்பின் 11ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைத் தொடங்கி விட்டது.

பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப் பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக் கழகத்தால் சான்றிதழ் வழங்கப்படும்.

சேர்க்கைக்கு உள்ள தகுதிகள் :-

  1. கல்வித் தகுதி 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் தமிழில் ஆர்வம்;
  2. வயது: 15 வயதிலிருந்து 70 வயது வரை

ஆவணங்கள் தரவேண்டியவை:-

  1. நிரப்பப்பட்ட விண்ணப்பம்
  2. கல்விச் சான்றிதழ் மின்நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம். எ.கா: மாற்றுச்சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ்)
  3. ஆதார் கார்டு மின்நகல்
  4. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று,
  • கல்விக் கட்டணம் (ஆண்டு முழுமைக்கும்) ரூ.7,500/- (ரூபாய் ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) பணமாக செலுத்தவேண்டும். இதில் புத்தகக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் அனைத்தும் அடங்கும்.
  • காசோலையோ அல்லது வரைவோலையோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பணம் செலுத்தியபின் அதற்கு உரிய இரசீது உடனடியாக வழங்கப்படும்.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பம், கல்விக்கட்டணம் மற்றும் ஆவணங்களுடன் அணுக வேண்டிய முகவரி:-
திரு.மா.கருப்புசாமி,
செயலாளர் – தெய்வத்தமிழ் அறக்கட்டளை,
9/1, மாஞ்சோலை முதல் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டு தாங்கல்,
சென்னை – 600 032, தமிழ்நாடு. செல்பேசி: +91 95000 45865.

ஏற்கெனவே பலநூறு மாணவர்கள் சான்றிதழ் பெற்று செந்தமிழ் ஆகம அந்தணர்களாக இல்லச் சடங்குகளிலும், கோயில் பூசைகளிலும் களம் கண்டு வருகிறார்கள். கோயில்களில் தமிழே கொலுவிருக்க, வாழ்வியல் சடங்குகளில் வண்டமிழே வழிகாட்ட அரிதில் அமைந்துள்ள அருந்தமிழ் வாய்ப்பு! இப்பயிற்சியைப் பயன் கொள்ள விரையுங்கள்!

அன்புடன்
தெய்வத்தமிழ்அறக்கட்டளை

Top