You are here
Home > செய்திகள் > சைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு

சைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு

மதிப்புரை

சைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு
இயற்றித் தொகுத்த ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

பக்கங்கள்: 500
விலை: ரூ 350
தொடர்புக்கு: +919445103775

 

போற்றியைச் சொன்னால் அது என்ன பலம் தரும் என்று அப்பர் சொல்கிறார். அது மந்திரச் சொல் ஆயிற்றே! ஏதாவது பலன் தர வேண்டுமே! என்ன பலம் தரும் என்று அப்பர் பாடுவதைப் பாருங்கள்.

 

முத்தூரும் புனல் மொய்யரி சிற்கரைப்

புத்தூரன்டி போற்றி ன்பாரெல்லாம்

பொய்த்தூரும்புலன் ஐந்தொடும் புல்கிய

மைத்தூரும் வினை மாற்றவும் வல்லரே.

 

போற்றி மந்திரச் சொல்லாய் வலிய சஞ்சித வினைகளைக் கூட ஒழித்து அதிலிருந்து நம்மைக் காக்கும் என்று மேற்சுட்டிக் காட்டப்பட்ட அப்பர் வாக்கால் அறியும் போது நமக்குத் தெம்பு ஏற்படுகின்றது. நாம் அனுபவிக்கும் துயரங்களுக்கு எல்லாம் நம்வினையே காரணம் என்று ஆன்றோர் அறைகூவி அறிவுறுத்துகின்றனர். எனவே, போற்றி என்று இறைவன் முன் மலரிட்டு அர்ச்சித்தால் வினை வழிவந்து வாட்டும் துயரங்கள் தொலைந்து போம் என்றால் இதுவல்லவா நாம் மேற்கொள்ள வேண்டியது

அதனால்தான் மக்களுக்கு உதவ அப்பர் ஒன்றல்ல, ஐந்து போற்றித்திருத்தாண்டகம் பாடி உதவினார்.

 

அவர் காட்டிய வழியில் அன்பர்களுக்கு உதவவே இந்த போற்றி நூற்றிரட்டு தொகுத்தளிக்கப்படுகிறது .

 

போற்றியின்  இறுதியில் எண்மாமலர் போற்றி செய்தே அர்ச்சனையை நிறைவு செய்ய வேண்டும் என்பது ஆகமம் கூறும் விதி. அதனால் இந்நூலில் அதன் முதன்மை கருதி முதலிலேயே அதன் விளக்கத்துடன் அளிக்கப்பட்டிருக்கிறது: கடைபிடிக்க !

 

இந்நூலில் தொகுக்கப்பட்ட போற்றிகள் எல்லாம் ஒரே நேரத்தில் எழுதப்பட்டவை அல்ல. அடியேன் இதுவரை ஏறத்தாழ 1550 குடமுழுக்குகளை தமிழால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக ஆற்றும் திருவருட்பேறு பெற்றவன். ஓவ்வொரு கோயிலில் ஓவ்வொரு புதிய மூர்த்தத்திற்கு போற்றி அந்தந்த குடமுழுக்கின் போதே ஆசுகவியாக இயற்றி வேள்விகளில் பயன்படுத்தியதை மாணவர்கள் சேகரித்துவைக்க அவற்றைத் தொகுத்தளித்தது தான் இந்நூல். ஆக, இத்தருணத்தில் அடியேன் எழுதியதை சேமித்து அடியேனுக்கு உதவிய மாணவர்களுக்கு எனது நன்றியை நெஞ்சார அறிவித்துக் கொள்கிறேன்.

 போற்றி சொல்க! சொன்னால் தேவேந்திரன்விட அதிக செல்வவளம் பெறுவாய் என்கிறார் அப்பர்!

இதைவிட வேறு என்ன வேண்டும் அன்பர்களுக்குஎனவே, இப்போற்றி நூற்றிரட்டை அன்பர்கள் பெற்று ஓதீப் பெரும்பயன் பல எய்துவார்களாக!

 எய்தி வழிபட எய்தாதன இல்லை! – திருமந்திரம்

 

சைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு
இயற்றித் தொகுத்த ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

பக்கங்கள்: 500
விலை: ரூ 350
தொடர்புக்கு: +919445103775

மதிப்புரை

Top