You are here
Home > செய்திகள் > மணிவாசகர் போற்றி 16

மணிவாசகர் போற்றி 16

செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

ஓம் வாதவூர் வந்துதி வள்ளலே போற்றி
ஓம் ஏதமில் கல்வியின் ஏற்றமே போற்றி
ஓம் வழுதியின் முதலமைச் சானாய் போற்றி
ஓம் பழுதிலா பரிதேர் பணியினாய் போற்றி
ஓம் அருந்தவன் குருந்தடி ஆண்டனன் போற்றி
ஓம் திருந்துநல் தீக்கையைத் தந்தனன் போற்றி
ஓம் பெருந்துறைக் கோயிலைப் புரிந்தனை போற்றி
ஓம் அரும்பொருள் தீர்ந்ததில் ஆர்கவி போற்றி
ஓம் வழுதி வறுத்திட உளைந்தனை போற்றி
ஓம் பொழுதில் பரமன்வந் தாண்டனன் போற்றி
ஓம் பிட்டுக்கு மண்சுமந் தருளினன் போற்றி
ஓம் பட்ட பிரம்படி பொறுத்தனன் போற்றி
ஓம் மூங்கையைப் பாட அருளினை போற்றி
ஓம் ஆங்கதில் சாக்கியர் அடக்கினை போற்றி
ஓம் கூத்தன்வா சகம்கொள கொடுத்தனை போற்றி
ஓம் பார்த்திடப் பரமனைப் படர்ந்தனை போற்றி

சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு 120 விதமான போற்றித் தொகுப்பு

Top