வணக்கம்
ஊர் பெயர் – “சாட்டியக்குடி”; கோயில் பெயர் – “ஏழ் இருக்கை”. இத்தலம் ஓர் வைப்புத்தலம்.
இத்தலத்தில் வந்து வணங்கிய தீக்கடவுளுக்கு அத்தீக்கடவுளை இயக்கும் “தீயினில் மூன்றாய்த் திகழ்ந்திடும்” சிவனே அவ்வடிவிலேயே அருள் புரிந்தான் என்பதால் இத்தலத்து சிவத்திருக்கோலம் மேலே கிளைத்த இருமுகங்கள், முத்தீயைக் குறிக்கும். மூன்று கால்கள், தீ எழுந்து வீசுவதால் ஏழு கைகள் என்ற வடிவில் அமைந்திருக்கும். அதனால் இக்கோயிலுக்கு “ஏழ் இருக்கை ” என்று பெயர்
திருச்சாட்டியக்குடி எங்குள்ளது??
இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருக்கீழ்வேளூர் கச்சனம் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உள்ளது.
இவண்
மு.பெ.சத்தியவேல் முருகன்.