கண்டன அறிக்கை 16-5-2024 ஆம் நாளிட்ட ஒரு கண்டன அறிக்கையை சுவிட்சர்லாந்து சைவ நெறிக்கூடம் வெளியிட்டதை வாட்ஸ் ஆப்பில் கண்டோம். அக்கண்டனத்துக்குரிய செய்தியை IBC தமிழ் தொலைக்காட்சியும் உறுதி செய்துள்ளது. அதாவது, டென்மார்க் அ/மி சிறீ வேல்முருகன் ஆலயத்தில் தமிழ் வழிபாட்டிற்கென அக்கோயில் அறங்காவலர் குழு தருவிக்க இலங்கையில் இருந்து வந்து அப்பணி மேற்கொண்டிருந்த தம்பிரான் சுவாமிகள் சிலரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தமிழ் எதிர்ப்புச் செய்தியை
செந்தமிழ் ஞானசம்பந்தர் – முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு
திருநாவுக்கரசர் விழா-அப்பர் அருளமுதம் – முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு
தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு – Tamizh Archakar Training
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு - 12ஆம் குழாம் மாணவர் சேர்க்கை SRM பல்கலைக்கழகம் வழங்கும் தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு - 13 ஆம் குழாம் (2024-25) மாணவர் சேர்க்கை மாணவர் சேர்க்கை 2024 மே மாதம் 1 ஆம் தேதியில் தொடங்கி மே மாதம் 10 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட்டுவிடும். தபால்/ கூரியரில் / இணையவழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நேரில் தகுதிச்சான்றுகளை ஆய்ந்து
சைவ சித்தாந்தம் என்னும் செம்பொருட் துணிவு நூல் வெளியீட்டு விழா – 01/05/2024
சைவ சித்தாந்தம் என்னும் செம்பொருட் துணிவு நூல் வெளியீட்டு விழா – 01/05/2024 முதுமுனைவர். மு.பெ.ச ஐயா அவர்கள் அருளியுள்ள சைவ சித்தாந்தம் என்னும் செம்பொருட் துணிவு நூல் வெளியீட்டு விழா நாள்: மே 1, 2024 அறிவன் (புதன்) கிழமை, மாலை 5.00 மணிக்கு விழா தொடக்கம். முத்தமிழ் மெய்யன்பர்களுக்கு! வணக்கம். தமிழர்களின் தனிப் பெருஞ் சிறப்பு தத்துவக் கொள்கை சைவ சித்தாந்தம். இதற்கு ஈடு இணை இல்லா ஒரு பேருரை உண்டு;
பழனி மலைக்கோயில் ஆகம விதிப்படி கட்டப்பட்டதா ?
சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களுக்கு 1) பழனி மலைக்கோயில் ஆகம விதிப்படி கட்டப்பட்டதா? ஆம் என்றால் என்ன ஆகமம் 2) பழைய வரலாறுகள் பழனி குறித்து எங்கு கிடைக்கும்? 3) History Professors உதவி செய்யவார்களா? தாங்கள் அடியேனிடம் கருத்து பெறக்கேட்டவை மேலன. இவற்றை வாட்ஸ் ஆப்பில் வரப்பெற்றேன். கேள்விகளின் உள்ளுறைகளை அவற்றின் இயைபு வரன்முறைப்படி இறுதியதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
திருப்பதி அருள்மிகு பாலாஜி தொன்மமும் புதிர்களும்
பெறுநர் மாண்பமை திரு. V.V.சுவாமிநாதன் அவர்கள், மேனாள் அறநிலையத்துறை அமைச்சர், 3, 2வது தெரு, ராமகிருஷ்னாபுரம், ஆதம்பாக்கம், சென்னை -600088 பெருமதிப்பிற்குரிய பெரியீர்! வணக்கம். தங்களின் 21-2-2024 ஆம் நாளிட்ட கடிதமும் உடன் “திருப்பதி அருள்மிகு பாலாஜி தொன்மமும் புதிர்களும்” என்ற நூலும் கிடைத்து அதன் தொடர்பான தங்கள் அன்பு வேண்டுகோளையும் அறிந்தேன். சொல்லப்பட்ட நூலினை முழுமையாகப் படித்தேன். அதன் பின்னணியில் தாங்கள் வேண்டியபடி எனது கருத்தை தங்களுடன் அடியிற்கண்டவாறு பகிர்ந்து கொள்கிறேன். அடியேன் முதலில் நூல் முழுமைக்கும் ஆய்வுக்கருத்துக்களை
13ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா
https://www.youtube.com/watch?v=2dyNC5S8RCo&feature=youtu.be சீலம் நிறைந்த செம்மல்களே! வள்ளிமணாளன் திருவருளாலும், வாரியார் சுவாமிகள் குருவருளாலும், திருப்புகழ் சிவம் வேலூர்.மு.பெருமாள் அவர்கள் நல்ஆசியாலும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை நடத்தும் "தமிழர் திருநாள் ஆசிபெறும் 13ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா வருகின்ற 06-01-2024 காரி(சனி)க் கிழமை மற்றும் 07-01-2024 ஞாயிற்றுக் கிழமை அன்று நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாண்டு பொங்கல் தொடங்கி அன்பர்கள்
தமிழ் நாட்காட்டி 2024
தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை –
33 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் நமது குருபிரான் ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 33ம் ஆண்டு முற்றோதல் விழாவை திருவருள் நலத்தால் நடாத்த இருக்கின்றன. இவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றாகவும் அதிலும் மூன்றாம் (3) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் இணைத்துள்ளேன். Download PDF விழாவின் முக்கிய நிகழ்வுகள்: 1. 3–ஆம் தந்திர முற்றோதல் 2. திருமந்திரம்