32 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 32ம் ஆண்டு முற்றோதல் விழாவை எடுக்கின்றன. இவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றில் இரண்டாம்(2) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது. கரோனா காரணமாக அரசின் அறிவுறுத்தலின்படி இவ்வாண்டு விழா நடைபெறுகிறது. அன்பர்கள் அதற்கேற்ப ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறோம். நாளும் நேரமும்: 01-01-2023 ; ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இடம்: சேவா நகர் சமூக நலக்கூடம், சேவா

வள்ளலாரும் வழக்குகளும் – சன்மார்க்க சிறப்பு சொற்பொழிவு

சன்மார்க்க சிறப்பு சொற்பொழிவு : திரு. ச. திருச்சுடர் நம்பி "வள்ளலாரும் வழக்குகளும்" நாள்: 25-12-2022 -  நேரம்: 3.00 - 4.00  இடம்: P M P தனலட்சுமி மஹால், சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்    

100வது திருவாசக முற்றோதல்

100வது திருவாசக முற்றோதல் வணக்கம். நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள், அசோக் நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் 11 டிசம்பர் 2022 அன்று நடைபெற உள்ள 100வது திருவாசக முற்றோதல் நிகழ்வில் நூறு நூறு ஆயிரம் இயல்பினராகி என்ற தலைப்பில் பேச உள்ளார். வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளவும். இடம்: ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், டாக்டர்.இராஜேந்திர பிரசாத் தெரு, சத்தியமூர்த்தி பிளாக், அசோக் நகர், சென்னை 600083. நேரம்: மாலை 4.00 மணி

பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் – நூல்

Tamizh Vazhipadu Book

அனைத்து பண்டிகைகளையும் ஒரு சேர குடும்பத்துடன் வழிபட, காரணகாரியத்துடன், தமிழ் மந்திரங்களுடன் நெறிமுறையுடன் வழிபட "பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம்" நூல் வந்துவிட்டது. 10 பண்டிகை வழிபாடுகளும் ஒரே நூலாக. 10 பண்டிகைகளின் உள்ளுறை, வழிபாட்டு முறைகள் 500 பக்கங்கள் விலை: ரூ 300/- Order Online ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய நூல். 1. பகலவன் வழிபாடு (பொங்கல்) 2. விநாயகர் சதுர்த்தி வழிபாடு 3. நவராத்திரி வழிபாடு 4. புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு 5. தீபாவளி வழிபாடு 6. கௌரி

அருட்பா நெறி அத்வைதமா?

வணக்கம். நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள், இரத்தினகிரியில் நடைபெற உள்ள தமிழ்நாடு அரசின் வள்ளலார் 200 நிகழ்வில் 27 நவம்பர் 2022 அன்று அருட்பா நெறி அத்வைதமா? என்ற தலைப்பில் பேச உள்ளார். வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளவும். இடம்: அ/மி பாலமுருகன் திருக்கோயில் மலையடிவாரம், இரத்தினகிரி. நேரம்: காலை 10.00 மணி அளவில்  

வள்ளலார் நெறி ஒரு பார்வை

வணக்கம். நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள், சென்னை பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத்துறையின் கீழ் “பேராசிரியர் அரங்க.இராமலிங்கம் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்வில் 25 நவம்பர் 2022 அன்று “வள்ளலார் நெறி ஒரு பார்வை” என்ற தலைப்பில் பேச உள்ளார். வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளவும். இடம்: தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க அறை, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை. நேரம்: முற்பகல் 11.00 மணி  

மாதந்தோறும் ஞானவேள்வி – தெய்வ சேக்கிழார் திருக்கோயில்

பூசம் நட்சத்திரத்தில் மாத குரு பூசை வழிபாடு - தெய்வ சேக்கிழார் திருக்கோயில், குன்றத்தூர். மாதந்தோறும் ஞானவேள்வி!!! நாள் : 18-10-2022, செவ்வாய்க்கிழமை. https://youtu.be/XUl5v1gly6o   மாலை : 3.00 மணிக்கு மேல் திருமுறை இன்னிசை, கந்தசாமி ஓதுவார் குழுவினருடன் 4.30 : போற்றி வழிபாடு. 5.00: சிறப்பு சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், அருட்குரு நாதர். மு . பெ. சத்தியவேல் முருகனார் அவர்கள். அனைவரும் வருக!! அருள் நலம் பெறுக!!!

Top