மாணவர்களுக்கு வணக்கம்! செந்தமிழில் மந்திரங்களா? வண்டமிழில் சடங்குகளா? என்று வினவியவர்கள் வியக்கும் வண்ணம் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பேராயமும், தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து அளித்து வரும் ஓராண்டு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு வெற்றிகரமாக ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அருட்டமிழ் உணர்வு பொங்க சேர்ந்துள்ள ஆறாம் குழாம் மாணவர்கள் புத்தெழுச்சி பெற தொடக்க விழா, அழைப்பிதழில் (இணைக்கப்பட்டுள்ளது) உள்ளபடி நடைபெற உள்ளது. வகுப்பு தொடர்பான மேலதிகத்தகவல்களுக்கு, மா.கருப்புசாமி ஒருங்கிணைப்பாளரை மின்னஞ்சலிலோ (அ) செல்பேசியிலோ 94440 79926 / 95000 45865 தொடர்பு கொள்ளவும்.
செய்திகள்
ஆசிரியர்க்கு பாராட்டு விழா, செந்தமிழ் ஆகம அந்தணர் பட்டமளிப்பு விழா
நமது குருபிரான் ஆற்ற உள்ள திருக்குட நன்னீராட்டு விழா – 9 ஜூலை முதல் 11 ஜூலை வரை
செந்தமிழ் ஆகம அந்தணர் விழா
30-05-2016 விடுதலை இதழில் செந்தமிழ் ஆகம அந்தணர் விழா நிகழ்வினை செம்மையாக பதிவு செய்துள்ளார்கள்.
6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு
உ சிவ சிவ டாக்டர் பட்டம் பெற்ற செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) 6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு
சிவபுராணம் – டாக்டர் மு.பெ.ச குரலில்
ஆசிரியர்க்கு மீண்டும் ஒரு டாக்டர் பட்டம்
டாக்டர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் தமிழ்ப் பயணத்தில் மற்றும் ஒரு மைல்கல். கட்ந்த மார்ச் மாதம் பாரத் பல்கலை கழகம் தெய்வீகத்தில் முதுமுனைவர் ( Doctor of Divinity ) என்று பட்டம் வழங்கி சிறப்பு செய்தது. அதனை தொடர்ந்து தற்பொது அவர்களின் தமிழ் புலமையை பாராட்டும் விதமாக அமெரிக்கா நாட்டில் இயங்கி வரும் உலகத் தமிழ் பல்கலை கழகம் (THE INTERNATIONAL TAMIL UNIVERSITY, USA) இலக்கியத்தில் முனைவர் (