தமிழ்த்தாய் வணக்கம் இயற்றியவர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்
ஆசிரியர் மேசை
முத்தாய்ப்பு முத்தமிழ்ப் பண்
ஆறாம் குழாம் தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு – துவக்க விழா – 16 ஜூலை 2016
மாணவர்களுக்கு வணக்கம்! செந்தமிழில் மந்திரங்களா? வண்டமிழில் சடங்குகளா? என்று வினவியவர்கள் வியக்கும் வண்ணம் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பேராயமும், தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து அளித்து வரும் ஓராண்டு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு வெற்றிகரமாக ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அருட்டமிழ் உணர்வு பொங்க சேர்ந்துள்ள ஆறாம் குழாம் மாணவர்கள் புத்தெழுச்சி பெற தொடக்க விழா, அழைப்பிதழில் (இணைக்கப்பட்டுள்ளது) உள்ளபடி நடைபெற உள்ளது. வகுப்பு தொடர்பான மேலதிகத்தகவல்களுக்கு, மா.கருப்புசாமி ஒருங்கிணைப்பாளரை மின்னஞ்சலிலோ (அ) செல்பேசியிலோ 94440 79926 / 95000 45865 தொடர்பு கொள்ளவும்.
ஆசிரியர்க்கு பாராட்டு விழா, செந்தமிழ் ஆகம அந்தணர் பட்டமளிப்பு விழா
நமது குருபிரான் ஆற்ற உள்ள திருக்குட நன்னீராட்டு விழா – 9 ஜூலை முதல் 11 ஜூலை வரை
செந்தமிழ் ஆகம அந்தணர் விழா
30-05-2016 விடுதலை இதழில் செந்தமிழ் ஆகம அந்தணர் விழா நிகழ்வினை செம்மையாக பதிவு செய்துள்ளார்கள்.
6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு
உ சிவ சிவ டாக்டர் பட்டம் பெற்ற செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) 6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு
தெய்வமுரசு ஆசிரியர்க்கு டாக்டர் பட்டம்
மார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம்
மார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம் ‘மார்க்கண்டேய கட்ஜீவைத் தெரியுமா?’ என்று கேட்டுக் கொண்டே நம் பவனிப் புலவர் உள்ளே வந்தார். ‘மார்க்கண்டேயரை நன்றாகத் தெரியும். எமனையே ஏப்பம் விட்டவராயிற்றே!’ என்றேன். ‘மார்க்கண்டேயர் இல்லை ஐயா! அவரை எனக்கும் தெரியும். என் ஆயுளைப் பற்றி சோதிடர்கள் சிலவற்றைக் கூறி இருக்கிறார்கள். அது பற்றி வாய்ப்பு வந்தால் மார்க்கண்டேயரைச் சந்தித்துக் கலந்தாலோசனை செய்து சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான்
நின்றவூர் பூசலாரும் நீதி நின்றிடாப் பூசலாரும்
நின்றவூர் பூசலாரும் நீதி நின்றிடாப் பூசலாரும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் (21-01-2014) புரட்டிக் கொண்டே வந்தேன். என்னையா புரட்கிறாய் என்று அந்த நாளிதழ்க்கு என் மேல் கோபம் வந்து விட்டது போலும்! அதிலிருந்த ஒரு செய்தி என்னைப் புரட்டிப் போட்டு விட்டது. தலைப்பு இது தான்: ‘அமைச்சர் வருமுன் குடமுழுக்கு; சிவாச்சாரியார் பணியிடை நீக்கம்!’ செய்தி இது தான்: “புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி வெற்றியாண்டவர் கோயிலில்