You are here
Home > கட்டுரைகள் > ஊழும் உயர்குறள் மூன்றும் – விதியின் வலிமை, முயற்சியின் பயன்,பெருமை

ஊழும் உயர்குறள் மூன்றும் – விதியின் வலிமை, முயற்சியின் பயன்,பெருமை

oozhum thirukkural, ஊழும் குறளும்

oozhum-kuralumஊழும் உயர்குறள் மூன்றும்

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

 oozhum thirukkural, ஊழும் குறளும்

1. ஊழிற் பெருவலி யாவுன மற்றொன்று

சூழினும் தான்முந்(து) உறும்.

2. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.

3. ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்

தாழா(து) உஞற்று பவர்.

 

மேற்கண்ட மூன்று குறள்களை எடுத்தாளாத தமிழ்ப் பேச்சாளரே இல்லை எனலாம். இவற்றில் விதியின் வலிமை முதல் குறளில் கூறப்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது குறள்கள் முறையே முயற்சியின் பயனையும், பெருமையையும் கூறுகிறது.  அவ்வாறு  முயற்சியின் பெருமையைக்கூறும்போது அக்குறள்கள் விதியின் வலிமையை உரைகல்லாகக் கொண்டே முயற்சியின் பெருமையைப் பறை சாற்றுகின்றன.

இதில் பிரச்சனை இதுதான்.  விதியை மதியால் வெல்ல முடியுமா?

முடியும் என்பார் ஒரு சிலர் முடியாது என்பார் மற்றவர். இதில் வேடிக்கை என்னவென்றால் இரு வரும் மேற்கண்ட குறள்களையே எடுத்தாண்டு தங்கள் வாதத்தை நிலைநாட்டப் பார்ப்பதுதான்.

உண்மையில் தோற்றத்தில் பார்த்தால் முதல் குறளுக்கும் மற்ற இரண்டு குறள்களுக்கும் முரண்பாடு உள்ளதாகவே தோன்றும். ஆனால் நன்கு துருவிப் பார்த்தால் மூன்று குறள்களும் ஒன்றிற்கொன்று முரண்பட்டதல்ல என்பது இனிது விளங்கும்.

அவ்வாறு துருவிப் பார்ப்பதற்கு முன்பாக விதிக் கட்சியாரும், விதிக்கு எதிரான மதிக் கட்சியாரும் மேற்காணும் குறள்களைத் தங்கள் வாதத்திற்கு ஏற்ப எவ்வாறு வளைத்துப் போடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வது இம்மூன்று குறள்களின் உண்மைப் பொருளுடன் ஒப்புநோக்க உதவும்.

மேலும் படிக்க Download PDF – ஊழும் உயர்குறள் மூன்றும் (PDF)

 

 

 

Top