You are here
Home > செய்திகள் > தமிழ் நாட்காட்டி 2025

தமிழ் நாட்காட்டி 2025

 

தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள்

  • எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி.
  • தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல்.
  • 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த  தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி)
  • மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல்.
  • அமாவாசை – பௌர்ணமி, ஏகாதசி, சுக்லபட்சம்-கிருஷ்ணபட்சம் எல்லாம் நமக்கு ஏன்? மறைமதி-நிறைமதி, பதிற்றொருமை, வளர்பிறை-தேய்பிறை என அவற்றின் தூய தமிழ் வடிவங்கள்.
  • பண்டிகைகள், விழாக்களைத் தமிழ்ப் பெயர்களால் வழக்கில் உலவவிடல்.
  • முகூர்த்தம்-நல்முழுத்தம் என தூய தமிழால் வழங்கப் பெறல்.
  • நாயன்மார்கள், மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் சிறந்த நாட்களின் குறிப்புகள் தமிழில்.
  • பிறைநாள் (திதி), நாண்மீன் (நட்சத்திரம்), ஓகம் (யோகம்), நல்முழுத்தம் (முகூர்த்தம்), கழுவாய் வழிபாடு (பிரதோஷம்), மறைமதி (அமாவாசை), நிறைமதி (பௌர்ணமி) என்று அமைக்கப் பெற்றது.
  • சாலிவாகன சகாப்தத்திற்கு வழியனுப்பி விடை தந்து திருவள்ளுவர் ஆண்டினை ஏந்தி எடுத்தல்.
  • மொத்தத்தில் எண்ணிலும், எழுத்திலும், எதிலும் தமிழ் மணம்!
  • திருமந்திர மாநாட்டில் 2-1-09 அன்று திருவாவடுதுறை ஆதீனம் தவத்திரு முத்துகுமாரசாமி தம்பிரான் சுவாமிகள் தெய்வமுரசு நாட்காட்டி வெளியீட்டிற்கு நல்வாழ்த்து வழங்கினார்.
  • நல் இளம் தலைமுறை நற்றமிழ் எண் அறிய நாட்டுக இந்நாட்காட்டி வீட்டின் வரவேற்பறையில்.

நாட்காட்டியை வாங்க BUY NOW

தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் விலை: ரூ.50. தபால் செலவு தனி. 50-க்கு மேல் வாங்கினால் சலுகை உண்டு.  தொடர்புக்கு: 9445103775 / 9380919082
email : [email protected]

 

 

Top