ஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு (ஆருத்ரா தரிசனம்) ஆடல் வல்லான் என்று தமிழிலும் நடராசர் என்று வட மொழியிலும் அழைக்கப்படும் இத்திருவுருவ வழிபாடு முழுக்கு முழுக்க தமிழர் வழிபாடு; இத்திருவுருவத்தை இறையருளால் கண்டறிந்து அமைத்தவர்கள் ஆன்றவிந்தடங்கிய தமிழ் அருளாளர்களே. அதனால் தான் நடராஜ மூர்த்தத்தைக் கொண்டாடும் கோயில் தமிழ் நாட்டைத் தாண்டினால் இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது. தமிழ் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது இந்த ஆடல் வல்லான் திருவுருவமும் வழிபாடும். ஆருத்ரா தரிசனம்