பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:10) சிவராத்திரி வழிபாடு ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பொருளடக்கம்: சிவலிங்க வழிபாட்டின் உள்ளுறை சிறப்பேற்றும் சிவராத்திரி செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி ? சுத்த சிவபூசை வழிபாட்டு முறைகள் சம்மிதா (உருவிரி) மந்திரங்கள் நூலின் விலை: ரூ. 50/- (பக்கங்கள்: 104) தொடர்புக்கு: 9445103775 9380919082
Tag: sivarathri
மாசிவனிரவு – சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை இதோ வந்துவிட்டது! சிவராத்திரி என்கிற சிவனிரவு. இது மாதச் சிவனிரவல்ல. ஆண்டுச் சிவனிரவு; மாசிவனிரவு. இதன் சிறப்பும் உண்மைப் பெருளும் ஏற்கெனவே தெய்வமுரசு இதழில் பலமுறை வெளிவந்து விட்டது என்பதை வாசகர்கள் அறிவர். எனவே, அவற்றை மனத்தில் இருத்தி சிவனிரவில் செய்ய வேண்டிய ஒன்றை இங்கே சிந்திப்போம்! மாசிவனிரவு பெரும் பேரொடுக்கத்தை, லயத்தைக் குறித்தது. அங்கே செய்ய வேண்டியது சிவநாம செபம் அன்றி வேறு ஒன்றும் கிடையாது.