ஊழும் உயர்குறள் மூன்றும் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் 1. ஊழிற் பெருவலி யாவுன மற்றொன்று சூழினும் தான்முந்(து) உறும். 2. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 3. ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா(து) உஞற்று பவர். மேற்கண்ட மூன்று குறள்களை எடுத்தாளாத தமிழ்ப் பேச்சாளரே இல்லை எனலாம். இவற்றில் விதியின் வலிமை முதல் குறளில் கூறப்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது குறள்கள் முறையே முயற்சியின் பயனையும், பெருமையையும் கூறுகிறது. அவ்வாறு முயற்சியின் பெருமையைக்கூறும்போது அக்குறள்கள் விதியின்