You are here
Home > செய்திகள் > குற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு

குற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு

இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும் அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். மூட நம்பிக்கைகளுக்கு முதல் எதிரி ஆண்டவன் தான். இதையே இந்நூலில் ஆசிரியர் “அறிவோடு அர்ச்சித்தல்” என்பது “அறிவு” என்பதை உடம்பொடு புணர்த்தல் என்ற இலக்கணப் படி மிக அழகாக எமுதியுள்ளார்.

இவ்வளவு சிறப்புமிக்க பிரதோஷ வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன் பொருள் என்ன? என்பதையெல்லாம் இந்நூலில் “உள்ளுறை” என்ற பகுதியிலும் “சிறப்பு” என்ற தலைப்பில் அதன் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுயுள்ளது.

 

கழுவாய் (பிரதோஷ) வழிபாடு – இசைக் குறுந்தகடு

A Devotional CD on Prathosam Worship based on Panniru Thirumurai

பிரதோஷ வழிபாடு உண்மைப் பொருள் என்ன? தத்துவ விளக்கம் என்ன?

What is the Meaning of Prathosam ? What are the principles of Prathosam ?

பிரதோஷ வழிபாட்டை எப்படி முறையாக ஆற்ற வேண்டும்? என்று விரிவாக, ஆழமாக ஆராய்ந்து அமைக்கப்பட்டது இந்த இசைக்குறுந்தகடு.

 

சிந்தையில் இனிக்கும் செந்தமிழ் இசை

இருபத்தைந்து இறைத்தமிழ் பதிகங்கள்

செவிக்கினிய சித்தாந்த விளக்கங்கள்

உயிர் உறுதிச் சுற்றின் (சோம-சூக்தவலம்)

உள்ளுறை – பாடும் பதிக மூலங்களும் (Text) உள்ளே

படம் பிடித்தாற் போல பைந்தமிழ் வருணனை

 

Top