
- This event has passed.
15ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா
January 10 @ 8:00 am – January 11 @ 5:00 pm

முருக நேய அன்பர்களே!
*வள்ளிமணாளன் திருவருளாலும்*, *வாரியார் சுவாமிகள் குருவருளாலும்*, *திருப்புகழ் சிவம் வேலூர்.மு.பெருமாள்* அவர்கள் நல்ஆசியாலும் *தெய்வத்தமிழ் அறக்கட்டளை* நடத்தும் “தமிழர் திருநாள் ஆசிபெறும் *15ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா வருகின்ற 10-01-2026 காரி(சனி)க் கிழமை மற்றும் 11-01-2026 ஞாயிற்றுக் கிழமை* அன்று நமது *ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார்* வழிநடத்த கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாண்டு பொங்கல் தொடங்கி அன்பர்கள் அனைவரின் வாழ்விலும் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்க வள்ளியம்மையையும் வள்ளிமணாளனையும் வழிபட்டு அருள்நலம் பெற அன்போடு அழைக்கின்றோம்.
*இடம்: பெனுகொண்ட ரெட்டி திருமண மண்டபம், வள்ளிமலை தேரடி அருகில், வள்ளிமலை.*
https://goo.gl/maps/LwDE4AQxcH6ZvgTX9



