உ முருகா சிந்தனைப் பட்டறை - செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் காற்றில் மிதந்து ககனத்தில் உலா வந்து ஈற்றில் நம் கையில் வந்து விழுந்தது ஓர் ஓலை. பிரித்துப் பார்த்தால் அது மலேசியாவில் இருந்து வந்த ஓர் இதழின் ஒரு பக்கம். இதழின் பெயர் ‘ஓசையின் ஆன்மிகம்’. ‘ஐயம் தெளிக’ 167 / 12-8-2014 என்ற தலைப்பில் சிவத்தமிழ்ச் செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள், க.சிவபாலன் / கிள்ளான் என்ற அன்பரின்