You are here
Home > செய்திகள் > 14ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா

14ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா

முருக நேய அன்பர்களே!

வள்ளிமணாளன் திருவருளாலும், வாரியார் சுவாமிகள் குருவருளாலும், திருப்புகழ் சிவம் வேலூர்.மு.பெருமாள் அவர்கள் நல்ஆசியாலும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை நடத்தும் “தமிழர் திருநாள் ஆசிபெறும் 14ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா வருகின்ற 04-01-2025 காரி(சனி)க் கிழமை மற்றும் 05-01-2025 ஞாயிற்றுக் கிழமை அன்று நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாண்டு பொங்கல் தொடங்கி அன்பர்கள் அனைவரின் வாழ்விலும் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்க வள்ளியம்மையையும் வள்ளிமணாளனையும் வழிபட்டு அருள்நலம் பெற அன்போடு அழைக்கின்றோம்.

இடம்: பெனுகொண்ட ரெட்டி திருமண மண்டபம், வள்ளிமலை தேரடி அருகில், வள்ளிமலை.

Google Map : https://goo.gl/maps/LwDE4AQxcH6ZvgTX9

Download Vallimalai Invitation PDF

Top