You are here
Home > செய்திகள் > வீட்டியல் தமிழ் வேதம்

வீட்டியல் தமிழ் வேதம்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல் பொருள்

காதல் இருவர் கருத்தொருமித்து – ஆதரவு

பட்டதே இன்பம் பரனைநினைந்து இம்மூன்றும்

விட்டதே பேரின்ப வீடு.

ஔவையார் தனிப்பாடல்

அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று நெறிகளில் முறையாக வாழ்ந்த மாந்தர் நிறைவாக இம்மூன்றையும் விட்டு சிறப்பெனும் செம்பொருள் காண்கின்ற நெறியில் நிற்பது தான் வீடு.

காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.

என்ற தொல்காப்பிய சூத்திரம் தமிழர்களின் வீட்டியல் நெறியை விளக்கும் மிகப் பழைமையான பாடலாகும்.

மூவர் முதலிகள் அருளிய அடங்கல் முறை, திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, காரைக்காலம்மையார் முதலிய சைவப்பெரியோர்களின் பிரபந்தங்கள், பெரிய புராணம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முதலானவை வீட்டியல் தமிழ் வேதத்தில் அடங்கும்.

Top