தினமும் ஒரு திருமுறைப் பாடல் செய்திகள் - முதல் திருமுறை பதிகம் எண் : 62 பதிகம் : திருக்கோளிலி பாடல் எண் : 7 கன்னவிலு மால்வரையான் கார்திகழு மாமிடற்றான் சொன்னவிலு மாமறையான் றோத்திரஞ்செய் வாயினுளான் மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியா னங்கையினில் கொன்னவிலுஞ் சூலத்தான் கோளிலியெம் பெருமானே.