
மாணவர்களுக்கு வணக்கம்!
செந்தமிழில் மந்திரங்களா? வண்டமிழில் சடங்குகளா? என்று வினவியவர்கள்
வியக்கும் வண்ணம் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பேராயமும்,
தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து அளித்து வரும் ஓராண்டு தமிழ்
அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு வெற்றிகரமாக ஆறாம் ஆண்டில் அடியெடுத்து
வைக்கிறது.
அருட்டமிழ் உணர்வு பொங்க சேர்ந்துள்ள ஆறாம் குழாம் மாணவர்கள் புத்தெழுச்சி
பெற தொடக்க விழா, அழைப்பிதழில் (இணைக்கப்பட்டுள்ளது) உள்ளபடி நடைபெற உள்ளது.
வகுப்பு தொடர்பான மேலதிகத்தகவல்களுக்கு, மா.கருப்புசாமி ஒருங்கிணைப்பாளரை
மின்னஞ்சலிலோ (அ) செல்பேசியிலோ 94440 79926 / 95000 45865 தொடர்பு கொள்ளவும்.
கோயில் மற்றும் வாழ்வியல் சடங்குகளில் கன்னல் தமிழே தழைக்க வேண்டும் என்ற
தணியாத ஆர்வமுள்ள தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு
சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.