தினமும் ஒரு திருமுறைப் பாடல் செய்திகள் - முதல் திருமுறை பதிகம் எண் : 88 பதிகம் : திருஆப்பனூர் பாடல் எண் : 2 குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர் விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின் அரவ மணிந்தானை யணியாப்ப னூரானைப் பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.