மூதுரை இளம்பூரணன் அன்புச் செல்வங்களே! இன்று நாம் பார்க்க இருக்கும் பாடல்: மூதுரையில் வரும் 14 - ஆவது பாடல். இந்தப் பாடல் மிகவும் புகழ் பெற்றது; பலரும் மேற்கோள் காட்டக் கேட்டிருக்கலாம். அந்தப் பாடல் இதோ! கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் – தானும்தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே கல்லாதவன் கற்ற கவி. கலைகள் எல்லாம் நமக்குக் கைவர வேண்டுமென்றால்
சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில் பகுதி 14
- செந்தமிழ்வேள்விச் சதுரர் முருகப்பெருமான்: “சிவோகம் பாவனை என்று உயிர்கள் செய்ய வேண்டிய பாவனை எது என்று விளக்கிக் கூறினீர்கள், தந்தையே! இன்னும் சற்று விளக்கமாகக் கூறினால் உலகம் பயன் பெறும்.” சிவபெருமான்: “சிவன் வேறல்ல; தான் வேறல்ல என்று பாவிக்க வேண்டும் என்று கூறியது உண்மை தான்! ஆனால் சிவம் எது என்று சரியாகத் தெரிந்தால் தானே அதனோடு ஒன்றி நிற்க முடியும்?” முருகப்பெருமான்: “ஆமாம்! அது உண்மை தான். சிக்கலே இங்கே
சைவக் கேள்விச் சிற்றம்பலம் பகுதி 13
- செந்தமிழ் வேள்விச்சதுரர் சிற்றம்பல அன்பர்: ஐயா! மீமாம்சை, சாங்கியம், யோகம் என்ற வடவேத சார தத்துவ மதங்களைப் பற்றித் தெளிவாக்கினீர்கள். வடவேத தத்துவ தரிசனங்கள் மொத்தம் ஐந்து என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எஞ்சிய இரண்டு யாவை? அறிவாகரர்: நல்ல கேள்வி. எஞ்சிய இரண்டும் நியாயம், வைசேடிகம் என்பனவாம். சாங்கியத்திற்கும் யோகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போலவே நியாயத்திற்கும் வைசேடிகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே இரண்டையும் சேர்த்து நியாய வைசேடிகம் என்றே கூறுவர்.
ஆழ்க தீயதெல்லாம்! அரன் நாமமே சூழ்க!
இன்று (7-10-2013) காலை தினமலர் நாளேட்டில் இனிய அற்புதமான செய்தி ஒன்று வந்துள்ளது. அந்தச் செய்தியை வாசகர்கள் அறிய அப்படியே அளித்திருப்பதை அடியில் காண்க: “பெங்களூரு, அக்.7-கர்நாடக மாநிலம், குத்ரோலி கோகர் நாதேஸ்வரர் கோவிலிலே இரண்டு விதவைகள், அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். ‘பரசுராமர் தேசம்’ எனப் போற்றப்படும் மங்களூரு மாவட்டம் குத்ரோலி கோகர்நாதேஸ்வரர் கோவிலில் தசரா விழாவை முன்னிட்டு, கணவனை இழந்த பெண்கள் இந்திர சாந்தி, லட்சுமி சாந்தி ஆகிய
Navarathiri – Toys and Dolls in Kolu – Is it a hobby !!!!
Navarathiri - Toys and Dolls in Kolu - Is it a hobby !!!! What is the real meaning of these toys and Dolls ? ? ? Well answered in the attached file, please read thru and Celebrate Navarathiri meaningfully. Please Download Pdf file
தமிழிசைச் சங்கத்தின் பண்ணாராய்ச்சி கலந்தாய்வுக் கூட்டம்
உ முருகா தமிழிசைச் சங்கத்தின் பண்ணாராய்ச்சி கலந்தாய்வுக் கூட்டம் - செந்தமிழ்வேள்விச்சதுரர் தமிழிசை இயக்கத்தின் முன்னோடியான ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் உருவாக்கியது தமிழிசைச் சங்கம். இச்சங்கம் உருவாகிய நாள் 19-04-1943. இதற்கென உருவாக்கப்பட்ட மன்றம் தான் சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உருவாகிய புகழ் பெற்ற அண்ணாமலை மன்றம். இம்மன்றம் திறந்து வைக்கப்பட்ட நாள்:21-10-1952. சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னால் இம்மன்றம் பல்லாண்டுகளாக தமிழிசைக்காக அமைதியாக நீதி கேட்டுக் கொண்டு நிற்கிறது! இத்தமிழிசைச் சங்கத்தின்
புதிய தி இந்து தமிழ் நாளிதழ்க்கு பேருவகையுடன் தெய்வமுரசு வாழ்த்துக்கள்!
புதிய தி இந்து தமிழ் நாளிதழ்க்கு பேருவகையுடன் தெய்வமுரசு வாழ்த்துக்கள்! 16-9-2013-ஆம் நாள் காலை இனிதாக விடிந்தது! காலையில் கையில் தி இந்து என்ற புதிய தமிழ் நாளிதழ்! 135- ஆண்டுகட்குப் பின்னர் இந்து குழுமத்திற்கு தமிழ் நாளிதழினை நற்றமிழில அ நாடுலாவச் செய்திட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி முன்னம் வந்திருப்பது தமிழ் அன்னையின் திருவருளே! தெய்வமுரசு என்கிற விண்பதிப்பின் ஆசிரியர் என்ற முறையில் இந்நாளேடு புதியதாய் தொடங்கப்பட்டாலும் தமிழ் மக்கள்
An open letter to Esquire Thiru. Tarun Vijay M.P.
To Thiru. Tarun Vijay Member of Parliament(Rajya Sabha) New Delhi - 110 001 An open letter to Esquire Thiru. Tarun Vijay M.P. Rare appears such a news-piece in newspapers as the report of speech made by you in Rajya Sabha. It was so nectarine to go through for people of India, especially people of Tamil
சேய்த்தொண்டர் புராணம்
சேய்த்தொண்டர் புராணம் பகுதி-24 செந்தமிழ்மாருதன் ஏப்ரல் 2013 இதழ் தொடர்ச்சி. . . மேல் இதழில் கச்சியப்பரின் தந்தையார் காளத்தியப்பர் காஞ்சி குமரகோட்டப் பூசையைக் கச்சியப்பரிடம் ஒப்படைத்து விட்டு விடுதலை பெற்றார் என்பதைக் கண்டோம். அந்த அற்புதமான கந்தன் பூசையைச் சிந்தை மகிழ கச்சியப்பர் நாடோறும் நடாத்த மேற்கொள்கிறார். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி போது ஆறிலும் புவனம் புகழ பூசைகள் நடந்து வருகின்றன. ஒரு நாள் இரவு; கச்சியப்பர் கரணமெலாம் குழைய கனவில் முருகன் காட்சி தந்தான்.
பதிப்பாசிரியர் வீட்டில் பதினோராந் திருமுறை முற்றோதல்
பதிப்பாசிரியர் வீட்டில் பதினோராந் திருமுறை முற்றோதல் - பவனிப்புலவன் “உமாபதி ஐயா! எங்கே கிளம்பிட்டீங்க!” நான் திரும்பிப் பார்த்த போது நன்கு பழக்கமான ஒரு திருமுறை அன்பர் நின்றிருந்தார். போகும் போதே எங்க கிளம்பிட்டீங்க என்று ஒரு கேள்வியா? உருப்பட்டா மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டேன். வீட்டிற்குள் திரும்பி ஒரு டம்ளரில் தண்ணீர் குடித்து விட்டு வரலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த அன்பர் கேட்டார்: ‘ஐயா! ஒரு சோடா குடிக்கலாமா?