பாடகச்சேரி இராமலிங்க சாமிகள் குருபூசை

26.07.2017 குருபிரான் நெறிப்படுத்த ஆறாம் குழாம் செந்தமிழாகம அந்தணர்களால் தமிழாகம முறைப்படி பாடகச்சேரி இராமலிங்க சாமிகள் குருபூசை, கிண்டி இரயில் நிலையம் அருகில் சாமிகளால் பதிட்டை செய்யப்பட்ட மங்களாம்பிகை உடனுறை பாடலீசுவரர் திருக்கோவிலில் 26.07.2017 ஆடிப் பூரம் அன்று சிறப்புற  நடைபெற்றது.

தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்? விளக்கச் சொற்பொழிவு

சண்முகக்கோட்டம் ஸ்ரீ அருணகிரிநாத பக்த ஜன சபையின் ஸ்ரீ அருணகிரிநாதர் ஜெயந்தி மற்றும் சபையின் 79 ஆம் ஆண்டு விழாவில் நமது குருபிரான் செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ.ச ஐயா அவர்கள் அருணகிரிநாதப்பெருமான் அருளிய வயலூர் தலத் திருப்புகழில் வரும் “தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்?” என்ற வரிகளைப் பற்றிய சிறப்பு விளக்கச் சொற்பொழிவு ஆற்ற உள்ளார். இடம்: அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், சண்முக ஞானபுரம், குயப்பேட்டை, சென்னை-12, நாள்:

அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு தொடக்க விழா

செந்தமிழில் மந்திரங்களா? வண்டமிழில் சடங்குகளா? என்று வினவியவர்கள் வியக்கும் வண்ணம் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பேராயமும், தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து அளித்து வரும் ஓராண்டு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு வெற்றிகரமாக ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அருட்டமிழ் உணர்வு பொங்க சேர்ந்துள்ள ஏழாம் குழாம் மாணவர்கள் புத்தெழுச்சி பெற தொடக்க விழா, அழைப்பிதழில் (இணைக்கப்பட்டுள்ளது) உள்ளபடி நடைபெற உள்ளது. தொடக்க விழா அழைப்பிதழ்  

சி கே சுப்பிரமணிய முதலியார் விருது

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களுக்கு செல்வமலி குன்றை மாநகர் சேக்கிழார் பெருமான் திருக்கோவிலில் பெரியபுராண உரையாசிரியர்   சி.கே.சுப்பிரமணிய முதலியார் விருதினை அடியார்கள் வழங்கி மகிழ்கிறார்கள்.

Top