மணிவாசகர் போற்றி 16

செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஓம் வாதவூர் வந்துதி வள்ளலே போற்றி ஓம் ஏதமில் கல்வியின் ஏற்றமே போற்றி ஓம் வழுதியின் முதலமைச் சானாய் போற்றி ஓம் பழுதிலா பரிதேர் பணியினாய் போற்றி ஓம் அருந்தவன் குருந்தடி ஆண்டனன் போற்றி ஓம் திருந்துநல் தீக்கையைத் தந்தனன் போற்றி ஓம் பெருந்துறைக் கோயிலைப் புரிந்தனை போற்றி ஓம் அரும்பொருள் தீர்ந்ததில் ஆர்கவி போற்றி ஓம் வழுதி வறுத்திட உளைந்தனை போற்றி ஓம் பொழுதில் பரமன்வந் தாண்டனன் போற்றி ஓம் பிட்டுக்கு மண்சுமந் தருளினன் போற்றி ஓம்

யோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்

யோகம் என்ற சொல் ஓகம் என்ற தமிழ் சொல்லிலிருந்து திரிந்த வடசொல். யோகா நெறியைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்த முதல் மனித இனம் தமிழினம் தான். சிந்துவெளிப் பகுதியில் வாழ்ந்த தமிழ்மக்கள் இடையே யோகம் இருந்துள்ளது. இன்று யோகத்திற்குக் கூறும் எட்டுறுப்புகளையும் தொல்காப்பியர் கூறி இருக்கிறார் தமிழ்ச் சொல் வடமொழி தீதகற்றல் இயமம் நன்றாற்றல் நியமம் இருக்கை ஆசனம் உயிர்வளிநிலை பிராணாயாமம் தொகைநிலை பிரத்தியாகாரம் பொறைநிலை தாரணை உள்குதல் தியானம் நொசிப்பு சமாதி நன்றி: "திருமந்திர மூன்றாம் தந்திர சாரம்" - முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் www.dheivamurasu.org     www.archakar.com     www.vedham.in https://www.youtube.com/dheivamurasu

வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (4)

உ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (4)      சென்ற பகுதியில் ஆரியர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நுழைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னமே ஏறத்தாழ 20000 ஆண்டுக்கு முற்காலத்தில் தமிழர்கள் வேள்வியினைக் கடல்கோளால் மூழ்கிப் போன குமரிக்கண்டம் என்ற தென்கோடியில் ஆற்றினர் என்பது நிறுவப்பட்டது. அப்படி வேள்வி செய்த மன்னர்களில் முதன்மையானவன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் என்பதும் அவன், ஆரிய வேதங்கள் இந்தியாவின் வடபகுதியை எட்டிக்

வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (3)

உ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . . முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (3) “வேள்வி” – (2)வில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி செய்த வேள்வி தமிழ்வேதப்படி நடத்தப்பட்டது என்பதைச் சான்றுகளுடன் நிறுவினோம். இனி இந்த வேள்வி அந்தப் பாண்டியனால் எக்காலத்தில் நடத்தப்பட்டது என்பது சிந்தனைக்குரியது.         நல்ல வேளையாக புறநானூற்றிலேயே இதற்குரிய தகவல் கிடைக்கிறது. புறநானூற்று 9 ஆம் பாடல் இத்தகவலை அளிக்கிறது. இப்பாடல் மேற்கண்ட பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (2)

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்  வேள்வி (1) என்ற பகுதியில் கண்ட சிந்தனையை மேலும் தொடர்கிறோம். வேள்வி தமிழருக்கே உரியது என்பதையும் அது ஆரியருடையது அல்ல என்பதையும் ஆரியரின் இரிக் வேத மேற்கோள்கள் சிலவற்றைக் காட்டி நிறுவினோம். சரி, வேள்வி தமிழரது தான் என்றால் தமிழ் இலக்கியங்களில் வேள்வியைப் பற்றி என்ன கூறப்படுகிறது என்பதை இப்பொழுது காண்போம். முதலில் வேள்வியைப் பற்றிச் சிறப்புற வேறு வேள்விகட்கும் தமிழ் வேள்வி க்கும் உள்ள ஒப்பீடு காட்டி

மதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு

சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு ஆசிரியர் : செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை : அவிரொளி சிவம் ச. மு. தியாகராசன்     இதுகாறும் தமிழ்ச் சமூகத்திற்குக் குறிப்பாக சைவ சமய உலகத்திற்குப் பயன்படும் வகையில் பல (பத்ததிகளை) செய்முறை கருவி நூல்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வரும் நம் ஆசிரியர் நாம் வழிபடும் தெய்வங்களுக்கும் அருளாளர் அடியார்களுக்கும் உரிய போற்றிகளை 16 இல் தொடங்கி நூற்றெட்டு, முந்நூற்றெட்டு, ஐநூறு

8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா

   Click here to Download VallimalaiPadiVizha.pdf  அருள்மிகு தேவி வள்ளியம்மை தவப்பீடம் வள்ளிமலை - 632520, வேலூர் மாவட்டம்    நாள்                 12.01.2019 முதல் 13.01.2019 வரை , காரி (சனி)க்கிழமை , ஞாயிறு

சைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு

மதிப்புரை சைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு இயற்றித் தொகுத்த ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பக்கங்கள்: 500 விலை: ரூ 350 தொடர்புக்கு: +919445103775   போற்றியைச் சொன்னால் அது என்ன பலம் தரும் என்று அப்பர் சொல்கிறார். அது மந்திரச் சொல் ஆயிற்றே! ஏதாவது பலன் தர வேண்டுமே! என்ன பலம் தரும் என்று அப்பர் பாடுவதைப் பாருங்கள்.   முத்தூரும் புனல் மொய்யரி சிற்கரைப் புத்தூரன்அடி போற்றி என்பாரெல்லாம் பொய்த்தூரும்புலன் ஐந்தொடும் புல்கிய மைத்தூரும் வினை மாற்றவும் வல்லரே.   போற்றி மந்திரச் சொல்லாய்

Top