உ தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது? & அறத்தமிழ் வேதம் ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் நீண்ட காலமாக தமிழ் வேதம் எது? தமிழரின் வேதம் எது என்று புரிபடாமல் தமிழர்கள் எதை எதையோ நம்முடைய வேதம், ஆகமம் என்று மருண்டு அதில் அலைப்புண்டு இருக்கையில் வாராது வந்த மாமணி போல் இறைதிருவருளால் தற்போது வெனி வந்துள்ளவை தான் மேற்படி நூல்கள். முருகப்
செய்திகள்
பொருட்டமிழ் வேதம் – மதிப்புரை
பொருட்டமிழ் வேதம் தொகுப்பாசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு. தியாகராசன் தமிழ் நூல் வேத வெளியீடுகளில் தற்போது நடை பயின்று வருவது இரண்டாம் வேதமாகிய 'பொருட்டமிழ்' வேதமாகும். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்பதற்கொப்ப பொருள் என்பது இன்று நாம் பயன்படுத்தும் பலவிதமான பொருட்களை மட்டும் குறித்த சொல் அல்ல. நம் புறவாழ்க்கை தொடர்புடைய அனைத்து விஷயங்களும் இதில் அடங்கும். இதை நமது பண்டைய
இன்பத்தமிழ் வேதம்
இன்பத்தமிழ் வேதம் சொல்வது காதலின் சிறப்பு – காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம்! இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது! பொறுப்புகள் மிகுதியும் உடையது! காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்! “மலரினும் மெல்லிது காமம் சிலரதன்செவ்வி தலைப்படு வார்” என்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறமே! அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையான “இன்பத்துப்பால்” இரண்டு பகுதிகளாக
வீட்டியல் தமிழ் வேதம்
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல் பொருள் காதல் இருவர் கருத்தொருமித்து – ஆதரவு பட்டதே இன்பம் பரனைநினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. ஔவையார் தனிப்பாடல் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று நெறிகளில் முறையாக வாழ்ந்த மாந்தர் நிறைவாக இம்மூன்றையும் விட்டு சிறப்பெனும் செம்பொருள் காண்கின்ற நெறியில் நிற்பது தான் வீடு. காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. என்ற தொல்காப்பிய சூத்திரம் தமிழர்களின் வீட்டியல் நெறியை
ஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு (ஆருத்ரா தரிசனம்) பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 8)
ஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு (ஆருத்ரா தரிசனம்) ஆடல் வல்லான் என்று தமிழிலும் நடராசர் என்று வட மொழியிலும் அழைக்கப்படும் இத்திருவுருவ வழிபாடு முழுக்கு முழுக்க தமிழர் வழிபாடு; இத்திருவுருவத்தை இறையருளால் கண்டறிந்து அமைத்தவர்கள் ஆன்றவிந்தடங்கிய தமிழ் அருளாளர்களே. அதனால் தான் நடராஜ மூர்த்தத்தைக் கொண்டாடும் கோயில் தமிழ் நாட்டைத் தாண்டினால் இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது. தமிழ் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது இந்த ஆடல் வல்லான் திருவுருவமும் வழிபாடும். ஆருத்ரா தரிசனம்
கார்த்திகை தீப வழிபாடு பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:7)
கார்த்திகை தீப வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:7) திருவண்ணாமலை - கார்த்திகை தீபம் ஆகியவற்றின் தொடர்புகளை சங்க இலக்கியத்தாலும், தருக்க முறையாலும், அருளாளர்கள் உரைகளாலும், பிற்கால இலக்கியத்தாலும், விஞ்ஞான கூற்றுகளாலும் சான்று காட்டி விளக்குகிறது இந்நூல். சங்க காலத்திற்கு முன்னிருந்து தொடர்ந்து வரும் இத்தொன்மை மிக்க தமிழர் வழிபாட்டை தமிழால் ஆற்றுவது எப்படி என்று விளக்குகிறது இந்நூல். நூல்: ரூ. 40/- Buy this Book Read as Ebook in Amazon Kindle பக்கங்கள்:
மந்தார விநாயகர் பைந்தமிழ்ப் பதிகம்
உ மந்தார விநாயகர் பைந்தமிழ்ப் பதிகம் பிள்ளையார்ப்பித்தன் இரா.உமாபதி முத்தமிழ் அடைவை முற்படு கிரியில் முற்பட வெழுதிய முதல்வ! சத்திநி பாதம் மலபரி பாகம் இருவினை ஒப்பினைத் தந்து தத்துவக் கூட்டம் அனைத்தையுங் கடக்கத் தமியனேற்(கு) அருள்வையோ! ஞான வித்தக மூர்த்தி! விமல! மந்தார விநாயக! விரைகழல் சரணே! 1 இருந்தமிழ் மொழிக்கே உரிய ஓங்கார எழுத்(து)அதன் வரிவடி வோடு பெருங்குரல் ஓசைப் பிளிறலுங் கொண்ட பிராணியாம் மதகரி முகத்தாய்! கரைந்துநெஞ்(சு) உருகி உனைத்தொழா(து) உவரி கடைந்திட வந்தநஞ்(சு) அருந்தி விருந்(து) அமிழ்(து) அளித்தோன் மைந்த! மந்தார விநாயக! விரைகழல் சரணே! 2 நற்றமிழ் முனிவன் அகத்தியன்
பொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா
கந்த சஷ்டி பெருவிழா
கந்த சஷ்டி பெருவிழா ஆண்டு தோறும் நடப்பதுபோல், இவ்வாண்டும் கந்த சஷ்டி பெருவிழாவினை முன்னிட்டு ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி முதல் தெரு, எண்.6 தெய்வத்திரு.சிவப்பிரகாசம் அரங்கில் 20.10.2017 முதல் 25.10.2017 வரை மாலை 5.00 மணி அளவில் முருகன் திருவுருவத்திற்கு வழிபாட்டினை தமிழ் முறையில் கூட்டு வழிபாடாக ஆற்றியும், அதையொட்டி, செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் ஆசியாலும் வழிநடத்துதலின் பேரிலும் முருகன் புகழை பாடிப் பரவிய அடியார்களையும் அவர்கள்