You are here
Home > ஆசிரியர் மேசை

கல்வெட்டுகளைக் காப்பாற்றுங்கள்

2011 ஜனவரி மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் "நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா?" என்று நல்லதொரு கேள்வியை எழுப்பி இருந்தது. 2009ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) கல்வெட்டாய்வாளர், தொல்லியல் அதிகாரி, நினைவுச் சின்னப் பாதுகாப்பாளர் போன்ற 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு துறைகளிலும் முதுகலைப் பட்டப் படிப்பையும், கல்வெட்டியலில் பட்டயப் படிப்பையும்

ஆறாம் குழாம் தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு – துவக்க விழா – 16 ஜூலை 2016

மாணவர்களுக்கு வணக்கம்! செந்தமிழில் மந்திரங்களா? வண்டமிழில் சடங்குகளா? என்று வினவியவர்கள் வியக்கும் வண்ணம் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பேராயமும், தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து அளித்து வரும் ஓராண்டு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு வெற்றிகரமாக ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அருட்டமிழ் உணர்வு பொங்க சேர்ந்துள்ள ஆறாம் குழாம் மாணவர்கள் புத்தெழுச்சி பெற தொடக்க விழா, அழைப்பிதழில் (இணைக்கப்பட்டுள்ளது) உள்ளபடி நடைபெற உள்ளது. வகுப்பு தொடர்பான மேலதிகத்தகவல்களுக்கு, மா.கருப்புசாமி ஒருங்கிணைப்பாளரை மின்னஞ்சலிலோ (அ) செல்பேசியிலோ 94440 79926 / 95000 45865 தொடர்பு கொள்ளவும்.

நமது குருபிரான் ஆற்ற உள்ள திருக்குட நன்னீராட்டு விழா – 9 ஜூலை முதல் 11 ஜூலை வரை

செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர், நமது குருபிரான் ஆற்ற உள்ள கடவுள் மங்கலம் (திருக்குட நன்னீராட்டு விழா) - 9 ஜூலை முதல் 11 ஜூலை வரை - இடம் சேக்காடு, சென்னை - 71.- அருள்மிகு வேதநாயகி உடனாய சோமநாதீச்சுரர் திருக்கோவில்.- அன்பர்கள் அனைவரும் வருக!... இறையருள் பெறுக!!!

6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு

உ சிவ சிவ டாக்டர் பட்டம் பெற்ற செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) 6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு

தெய்வமுரசு ஆசிரியர்க்கு டாக்டர் பட்டம்

மு.பெ.சத்தியவேல் முருகனார்க்கு டாக்டர் பட்டம்

செந்தமிழ்வேள்விச் சதுரர் தெய்வமுரசு ஆசிரியர் சிவத்திரு. மு.பெ.சத்தியவேல் முருகனார்க்குப் பாரத் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. சத்தியவேல் முருகன்- ஆர் ? – தற்சிறப்புக் குறிப்பு

மார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம்

மார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம்     ‘மார்க்கண்டேய கட்ஜீவைத் தெரியுமா?’ என்று கேட்டுக் கொண்டே நம் பவனிப் புலவர் உள்ளே வந்தார். ‘மார்க்கண்டேயரை நன்றாகத் தெரியும். எமனையே ஏப்பம் விட்டவராயிற்றே!’ என்றேன். ‘மார்க்கண்டேயர் இல்லை ஐயா! அவரை எனக்கும் தெரியும். என் ஆயுளைப் பற்றி சோதிடர்கள் சிலவற்றைக் கூறி இருக்கிறார்கள். அது பற்றி வாய்ப்பு வந்தால் மார்க்கண்டேயரைச் சந்தித்துக் கலந்தாலோசனை செய்து சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான்

Top