You are here
Home > அறத்தமிழ்

அற்ற குளத்தில் . . .

           அறத்தமிழ் வேதம் - மூதுரை        - தொடர்ச்சி அருந்தமிழ்ச் செல்வங்களே! இன்று நாம் பார்க்க இருக்கிற பாடல் 17-ஆவது பாடல். பாடலைக் கேளுங்கள்! அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு. செல்வங்களே! இந்தப் பாடல் மிகமிக முக்கியமான பண்பாட்டைப் பதிய வைக்கிற பாடல். உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் மனிதர்களுக்கும் பொருந்தும் பாடல் இது. நாம் என்ன செய்கிறோம்? ஒரு சிலரோடு பழகுகிறோம்;

அடக்கம் உடையார் – மூதுரை – இளம்பூரணன்

குழந்தைகளே! இன்று நாம் பார்க்கும் மூதுரைப் பாடல் இதோ! அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. இந்தப் பாடலில் கூறப்படும் செய்தி நம் வாழ்க்கைக்கு மிக மிக அவசியமானது. அதாவது அறிவும் ஆற்றலும் உடைய பெரியவர்கள் எப்போதும் அடக்கமாய் இருப்பார்கள்; ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள். அரைகுறை அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள் தான் துள்ளுவார்கள். குடம் முழுதும் நீர் இருக்குமானால் தளும்பாது; குடத்தில் பாதி

அறத்தமிழ் வேதம் – மூதுரை – வேங்கை வரிப்புலிநோய்…

இளம்பூரணன்    தெள்ளிய உள்ளச் செல்வங்களே!        இன்று நாம் பார்க்க இருக்கும் மூதுரைப் பாடல் இதுவே:         ”வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி         ஆங்கதனுக் காகார மானாற்போல் – பாங்கறியாப்         புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்         கல்லின்மேல் இட்ட கலம்.”       சிறிய வயதில் உள்ளம் கள்ளம் கபடம் ஏதும் இல்லாமல் அழுக்கேறாமல் பளிங்கு போல தெளிவாக இருக்கும். அதனால் வெளி உலகில் காண்பன அத்தனையும் உண்மை என்று நம்பத் தோன்றும். ஆனால் என்ன

அறத்தமிழ் வேதம் பகுதி 13 கானமயில் ஆட. . .

மூதுரை        இளம்பூரணன் அன்புச் செல்வங்களே!         இன்று நாம் பார்க்க இருக்கும் பாடல்: மூதுரையில் வரும் 14 - ஆவது பாடல். இந்தப் பாடல் மிகவும் புகழ் பெற்றது; பலரும் மேற்கோள் காட்டக் கேட்டிருக்கலாம். அந்தப் பாடல் இதோ!       கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி       தானும் அதுவாகப் பாவித்துத் – தானும்தன்       பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே       கல்லாதவன் கற்ற கவி.           கலைகள் எல்லாம் நமக்குக் கைவர வேண்டுமென்றால்

அறத்தமிழ் வேதம்

அறத்தமிழ் வேதம் – மூதுரை – இளம்பூரணன் – பகுதி – 12 செல்லச் சிறுவர்களே ! இது வரை மூதுரையில் 12 பாடல்களைப் பார்த்தோம். இப்போது 13-வது பாடலைப் பார்ப்போம். அது வருமாறு: கவையாகிக் கொம்பாகிக் காட்டடிகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டா தவன்நல் மரம். எத்தனையோ பேர், கோடிக் கணக்கில் எழுதப் படிக்கத் தெரியாமலே வாழ்ந்து மறைந்து போகிறார்கள். இந்தியாவில் நல்ல வேளை, தமிழ்நாட்டையும், கேரளாவையும் இந்தப் பட்டியலில் சேர்க்க

Top