
Events Search and Views Navigation
October 2020
ஆயுத பூசை வழிபாடு ஏன்? .. ஓர் ஆய்வுரை
வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் விழாக்கால சிறப்புச் சொற்பொழிவு ஆற்றும் நிகழ்வு அக்டோபர் 24ஆம் தேதி சனிக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel நேரலையில் https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம். ஆயுத பூசை வழிபாடு ஏன்? .. ஓர் ஆய்வுரை
November 2020
12 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா
12 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா 15-11-2020 முதல் 20-11-2020 வரை முருகு தமிழ் மெய்யன்பர்களே! வணக்கம். மேற்படி இவ்வமைப்பு நடத்தும் தனது 12 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு விழா உலகையே அலைக்கழிக்கும் கொடிய கொள்ளை நோய்க்கிருமி கொரோனாவின் இரண்டாம் அதிவேகப் பரவல் காரணமாக அரசு வழிகாட்டுதலின் படி மிக எளிமையாக நிகழ்நிரலின்படி நடைபெறும். அன்பர்கள் வீட்டிலிருந்தபடியே வான்வெளி இணைப்பு செயலி (Zoom) மற்றும் (YouTube) https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA வழியாகக் கண்டு களிக்கலாம். 11 ஆண்டுகளாக சிறப்புறக் கொண்டாடிய அன்பர்கட்கு 12 ஆம் ஆண்டில் அதன் பலனாக விழாவை வீடுபேறாக ஆக்கியுள்ளான் கந்தன். அதாவது வீட்டிலிருந்தே பெரும் பேறு. இதனால் இவ்வுலகிலேயே வீடுபேறு பெற்று உலாவரும் சீவன் முத்தர்களாக…
கார்த்திகை தீபத்திருநாள் சிறப்புச் சொற்பொழிவு
வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் கார்த்திகை தீபத்திருநாள் சிறப்புச் சொற்பொழிவாக கற்பனை களஞ்சிய நம்பி துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய “சோணசைல மாலை” என்ற தலைப்பில் நவம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணி அளவில் சொற்பொழிவு ஆற்ற உள்ளார். தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.
January 2021
30 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
https://youtu.be/xQjjmUBJSLI https://drive.google.com/drive/folders/1kgD06uoTfyZBHoqUslDsYdx09_yty001?usp=sharing
10 ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா
சேந்தன் அன்பர்களே!! வணக்கம். இறைவன் திருவருளாலும் குருவருளாலும் இந்த ஆண்டு (2021) வள்ளிமலை படிவிழா மற்றும் மலைவல விழா ஜனவரி 9 மற்றும் 10 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அவ்விழாவிற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். அனைவரும் வருக! அருள்நலம் பெறுக!! (மேலதிக விவரங்களுக்கு அழைப்பிதழை காணவும்) இங்ஙனம் தெய்வத்தமிழ் அறக்கட்டளை உறுப்பினர்.
February 2021
April 2021
புறநானூறு தொடர் சொற்பொழிவு 200வது பாடல்
வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் புறநானூறு தொடர் சொற்பொழிவு ஏறத்தாழ 11 வருடங்கள் 4 மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது இதுவரை யாரும் செய்திடாத அரும்பெரும் சாதனை என்று தமிழ் கூறும் நல்லுலகத்தார் போற்றுவர் என்பது மறுக்கொணா உண்மை. அந்த அற்புத ஞானவேள்வியிலே தற்போது ஒரு முக்கிய பகுதியை வந்தடைந்துள்ளோம். 11 வருடங்கள் கழித்து 200வது பாடலை எட்டியுள்ளோம். இது ஒரு சிறந்த நிகழ்வு ஆகையால் இச்சிறப்பிற்கு சிறப்பு சேர்க்க முனைவர் திரு.அப்துல் காதர், பொதுச் செயலாளர், தமிழ் இயக்கம், VIT பல்கலைக் கழகம் மற்றும் முனைவர் திரு.கரு.நாகராஜன், தலைவர், தமிழ்ப் பேராயம், SRM பல்கலைக் கழகம் எனும் இருபெரும் தமிழ் ஆளுமை கொண்ட அறிஞர்கள் இந்நிகழ்வில் சிறப்புரை வழங்கி…
July 2021
August 2021







