You are here
Home > செய்திகள் (Page 15)

உலகத் தாய்மொழி விழா – தமிழர்களின் நிலை

செந்தமிழ் வேள்விச் சதுரர் மு பெ சத்தியவேல் முருகனார் அவர்கள் "உலகத் தாய்மொழி விழா நாளில் "தமிழர்களின் நிலை" என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்  

மாசிவனிரவு – சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை

சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை  இதோ வந்துவிட்டது! சிவராத்திரி என்கிற சிவனிரவு. இது மாதச் சிவனிரவல்ல. ஆண்டுச் சிவனிரவு; மாசிவனிரவு. இதன் சிறப்பும் உண்மைப் பெருளும் ஏற்கெனவே தெய்வமுரசு இதழில் பலமுறை வெளிவந்து விட்டது என்பதை வாசகர்கள் அறிவர். எனவே, அவற்றை மனத்தில் இருத்தி சிவனிரவில் செய்ய வேண்டிய ஒன்றை இங்கே சிந்திப்போம்! மாசிவனிரவு பெரும் பேரொடுக்கத்தை, லயத்தைக் குறித்தது. அங்கே செய்ய வேண்டியது சிவநாம செபம் அன்றி வேறு ஒன்றும் கிடையாது.

தமிழ் அருட்சுனைஞர் – மாணவர்களுக்கான பட்டயம் வழங்கும் விழா

தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு – 5 ஆம் குழாம் மாணவர்களுக்கான பட்டயம் வழங்கும் விழா 28 ஜனவரி 2017 சனிக்கிழமை அன்று வடபழனி SRM பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்றது.

11 ஆம் திருமுறை முற்றோதல் – நிறைவு விழா (15-01-2017)

பேரன்புடையீர்! 11-ஆம் திருமுறை முற்றோதல் ஏறத்தாழ 7 ஆண்டுகளாக அன்பர்கள் பலர்  இல்லத்தில் சிறப்பாக நடத்திக் கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. இத்திருமுறை முற்றோதல் வரும் 15-1-2017-ல் இறைதிருவருளால் நிறைவு எய்துகிறது. ஒவ்வொரு முற்றோதல் நிகழ்ச்சியிலும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததைப் போலவே இந்த நிறைவு விழாவிற்கு நமது அன்பர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். இடம்: ஸ்ரீலிங்கம் மஹால், எண்:14, நேரு தெரு, பாரதிபுரம், குரோம்பேட்டை, சென்னை – 44 (பாரதிபுரம் விநாயகர் கோயில்

தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டி

தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். சாலிவாகன சகாப்தத்திற்கு வழியனுப்பி விடை தந்து திருவள்ளுவர் ஆண்டினை ஏந்தி எடுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த புத்தம் புது தமிழ் இணைப் பெயர்கள் - வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய

பொங்கல் – தமிழர் திருநாள் – பகலவன் வழிபாடு

பண்டிகைகளை தமிழால் வழிபடுவோம். பொங்கல் - தமிழர் திருநாள்- பகலவன் வழிபாடு நூலின் விலை ரூ.30 எதற்காக பொங்கல் திருவிழா? அதிலும் இது தமிழர் திருநாள் என்று கூறப்படுகிறது. இங்கே தமிழ்நாட்டில் இது வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது போல வட நாட்டில் கொண்டாடப்பெறுவதில்லை என்பது கண்கூடு. அப்படியானால் இது தமிழர்களுக்கே உரிய திருவிழா என்பது நன்றாகத் தெளிவாகிறது. தமிழர்கள் எதையுமே ஆழ சிந்தித்து அழகான அடிப்படையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மரபுகளையும், வழிபாடுகளையும் தோற்றுவிப்பதில்

Top