You are here
Home > செய்திகள் (Page 16)

உலகத் தாய்மொழி விழா – தமிழர்களின் நிலை

செந்தமிழ் வேள்விச் சதுரர் மு பெ சத்தியவேல் முருகனார் அவர்கள் "உலகத் தாய்மொழி விழா நாளில் "தமிழர்களின் நிலை" என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்  

மாசிவனிரவு – சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை

சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை  இதோ வந்துவிட்டது! சிவராத்திரி என்கிற சிவனிரவு. இது மாதச் சிவனிரவல்ல. ஆண்டுச் சிவனிரவு; மாசிவனிரவு. இதன் சிறப்பும் உண்மைப் பெருளும் ஏற்கெனவே தெய்வமுரசு இதழில் பலமுறை வெளிவந்து விட்டது என்பதை வாசகர்கள் அறிவர். எனவே, அவற்றை மனத்தில் இருத்தி சிவனிரவில் செய்ய வேண்டிய ஒன்றை இங்கே சிந்திப்போம்! மாசிவனிரவு பெரும் பேரொடுக்கத்தை, லயத்தைக் குறித்தது. அங்கே செய்ய வேண்டியது சிவநாம செபம் அன்றி வேறு ஒன்றும் கிடையாது.

தமிழ் அருட்சுனைஞர் – மாணவர்களுக்கான பட்டயம் வழங்கும் விழா

தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு – 5 ஆம் குழாம் மாணவர்களுக்கான பட்டயம் வழங்கும் விழா 28 ஜனவரி 2017 சனிக்கிழமை அன்று வடபழனி SRM பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்றது.

11 ஆம் திருமுறை முற்றோதல் – நிறைவு விழா (15-01-2017)

பேரன்புடையீர்! 11-ஆம் திருமுறை முற்றோதல் ஏறத்தாழ 7 ஆண்டுகளாக அன்பர்கள் பலர்  இல்லத்தில் சிறப்பாக நடத்திக் கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. இத்திருமுறை முற்றோதல் வரும் 15-1-2017-ல் இறைதிருவருளால் நிறைவு எய்துகிறது. ஒவ்வொரு முற்றோதல் நிகழ்ச்சியிலும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததைப் போலவே இந்த நிறைவு விழாவிற்கு நமது அன்பர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். இடம்: ஸ்ரீலிங்கம் மஹால், எண்:14, நேரு தெரு, பாரதிபுரம், குரோம்பேட்டை, சென்னை – 44 (பாரதிபுரம் விநாயகர் கோயில்

Top