சிற்றம்பல அன்பர்: ஐயா! நாங்கள் சில மாதங்கள் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்து விட்டோம். அதனால் கேள்விச் சிற்றம்பலத்தில் இடைவேளை நீண்டு விட்டது. நல்ல வேளை! இறைவன் திருவருளால் மீண்டும் சிற்றம்பலம் இன்று கூடி இருக்கிறது. இதற்கு முந்தைய கூட்டத்தில் மாயாவாதம் எனப்படும் சங்கர வேதாந்தத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினோம். பின்னர் சில மாதங்கள் மாயாவாதத்தின் மயக்கமோ என்னவோ சில மாதங்கள் சிற்றம்பலம் மயங்கிக் கிடந்தது. இப்போது தெளிந்து வந்திருக்கிறோம். சங்கர
சைவக் கேள்வி
சைவக் கேள்விச் சிற்றம்பலம் – செந்தமிழ் வேள்விச் சதுரர்
சிற்றம்பல அன்பர்: ஐயா! இடையிலே தாங்கள் வெளியூர் சென்றுவிட்டீர்கள்! எனவே சிற்றம்பலம் வெற்றம்பலமாக இங்கே வெறிச்சோடி இருந்தது. இப்போது தாங்கள் வந்தவுடன் சிற்றம்பலம் களை கட்டி விட்டது. நாங்களும் சில சமயத் தத்துவங்களை நாங்களாகவே படித்து நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டோம். எனவே இப்போது கேள்விக் கணைகளோடு காத்திருக்கிறோம். வழக்கம் போல் அன்பர்களுக்குப் பதிலியாக நானே கேள்விகளை முன் வைக்கிறேன். அறிவாகரர்: சுவையான உணவு படைக்கும் போது இடையில் இலையில் ஊறுகாயும் வைப்பார்கள்.
சைவக்கேள்விச் சிற்றம்பலம் – பகுதி14
செந்தமிழ்வேள்விச் சதுரர் அறிவாகரர்: என்ன சிற்றம்பல அன்பரே! என்ன கொஞ்ச நாட்களாக ஆளையே காணோம். எல்லா சந்தேகங்களும் தீர்ந்து விட்டனவா? சிற்றம்பல அன்பர்: சந்தேகமாவது தீர்வதாவது. எந்தேகம் இருக்கிற வரைக்கும் சந்தேகம் தீராது என்று நினைக்கின்றேன். இடையில் கார்த்திகை தீபம் வந்துவிட்டது. எனவே திருவண்ணாமலை சென்றிருந்தேன். அப்பப்பா! என்ன கூட்டம், என்ன கூட்டம்! ஏறத்தாழ 20 லட்சம் பேர் இருக்கும் என்கிறார்கள். அறிவாகரர்: நீங்கள் குறைவாகச் சொல்கிறீர்கள். எனக்குத் தெரிந்த கணக்குப்படி மொத்தம் 33
சைவக் கேள்விச் சிற்றம்பலம் பகுதி 13
- செந்தமிழ் வேள்விச்சதுரர் சிற்றம்பல அன்பர்: ஐயா! மீமாம்சை, சாங்கியம், யோகம் என்ற வடவேத சார தத்துவ மதங்களைப் பற்றித் தெளிவாக்கினீர்கள். வடவேத தத்துவ தரிசனங்கள் மொத்தம் ஐந்து என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எஞ்சிய இரண்டு யாவை? அறிவாகரர்: நல்ல கேள்வி. எஞ்சிய இரண்டும் நியாயம், வைசேடிகம் என்பனவாம். சாங்கியத்திற்கும் யோகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போலவே நியாயத்திற்கும் வைசேடிகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே இரண்டையும் சேர்த்து நியாய வைசேடிகம் என்றே கூறுவர்.
சைவக் கேள்விச் சிற்றம்பலம்
சைவக் கேள்விச் சிற்றம்பலம் செந்தமிழ் வேள்விச்சதுரர் பகுதி – 12 ஏப்ரல் 2013 இதழ் தொடர்ச்சி . . . அறிவாகரர்: அன்பரே! யோகம் என்பதைப் பதஞ்சலி முனிவர் தான் முதலில் கண்டு பிடித்ததாகக் கூறியது எத்தனை பெரிய பொய் என்பதைச் சான்று காட்டி விளக்கினால் அம்பலத்தார் எல்லாம் ஆச்சரியப் படுவீர்கள். சிற்றம்பல அன்பர்: சொல்லுங்கள் ஐயா! நாங்களும் இன்னும் எங்களைப் போல இன்னும் உலகில் பலரும் எவ்வளவு அறியாமையில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தங்களிடம் விவரங்களைக்