You are here
Home > சேய்த்தொண்டர்

அருணகிரி நாதர் (பகுதி 2)

- தொடர்ச்சி அருணகிரி நாதர்     அருணகிரி நாதரின் வரலாறு பற்றி சரிவரத் தகவல்கள் பதிவாகவில்லை என்று தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள், ‘அருணகிரி நாதர் வரலாறும் ஆராய்ச்சியும்’ என்ற தமது நூலில் ஏக்கத்துடன் எடுத்துரைத்ததைப் பார்த்தோம். ஆனால் சேதுபதி அரசர் நடத்திய நான்காம் தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராய் வீற்றிருந்த மூதறிஞர் ராவ்சாகிப் மு.இராகவையங்கார் அவர்கள் அரிதில் முயன்று சில தகவல்களைத் தமிழ்ச் சங்கத்தின் இதழான ‘செந்தமிழ்’ என்ற இதழில்

சேய்த்தொண்டர் புராணம் – அருணகிரிநாதர் – செந்தமிழ் மாருதன்

‘இளந்தமிழன் செழுங்கொண்டல் என உலகம் பரவும் எம்பெருமான் அருணகிரி நாதர்க்கும் அடியேன்’                                     - சேய்த்தொண்டத் தொகை முருகனடியார் என்றாலே நம் கண்முன் நிற்பவர் அருணகிரிநாதர் தான் என்பதை எல்லோரும் ஒப்புவர். இறைவனைப் புகழ்ந்து பாடுவது அனைத்துமே திருப்புகழ் தான். சுந்தரர் தாம் பாடிய பதிகங்களைத் திருப்புகழ் என்றே கூறினார். “தேடிய வானோர் சேர்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே” என்பது அவரது வாக்கு. எனவே இறைவனைப் பாடியதெல்லாம் திருப்புகழ் என்றாலும் அது பொதுச்சொல்.

சேய்த்தொண்டர் புராணம் பகுதி 26 பொய்யாமொழியார் வரலாறு

செந்தமிழ் மாருதன் “இம்பரெலாம் பரவுறுபொய் யாமொழியார்க் கடியேன்”        இந்த உலகம் தோன்றி நின்று அழிவது என்பது சித்தாந்தம் நிறுவும் கொள்கை. ஆனால் இந்த உலகில் காணப்படும் உயிர்கள் அநாதி அதாவது என்று தோன்றியது என்று கூற இயலாததாய் என்றும் உள்ளது என்று சித்தாந்தம் கூறுகிறது. உயிர் மட்டுமல்ல, உயிர்களையும் உலகையும் இயக்குகின்ற இயவுள் எனப்படும் கடவுளும் அநாதி என்றும், அதாவது ‘என்றும் உள்ள பொருள்’ என்பது சித்தாந்தம். அவ்வளவு தானா? வேறு

சேய்த்தொண்டர் புராணம் பகுதி 25 முருகம்மையார் வரலாறு

செந்தமிழ்மாருதன்               “நலந்திகழும் முருகம்மை அடியார்க்கும் அடியேன்”        சிவனடியார் அறுபத்துமூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையாருக்கு ஒரு தனியிடம் உண்டு. ஏனைய நாயன்மார்கள் அனைவரும் நின்று கைகூப்ப, காரைக்கால் அம்மையார் மட்டும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் பெருமை பெற்றவர். அது போல, சேய்த்தொண்டர்கள் அனைவரிலும் முருகம்மையாருக்கு ஒரு தனியிடம் உண்டு.        இவரைப் பற்றி பல பெரியோர்கள் பாடிப் பரவி இருக்கிறவர்கள். நக்கீரர் உரைத்த திருமுருகாற்றுப்படைக்குச் சாற்றுக்கவிகள் பத்தில் ஒரு பாடல் இந்த முருகம்மையாரைப்

சேய்த்தொண்டர் புராணம்

சேய்த்தொண்டர் புராணம் பகுதி-24 செந்தமிழ்மாருதன்   ஏப்ரல் 2013 இதழ் தொடர்ச்சி. . . மேல் இதழில் கச்சியப்பரின் தந்தையார் காளத்தியப்பர் காஞ்சி குமரகோட்டப் பூசையைக் கச்சியப்பரிடம் ஒப்படைத்து விட்டு விடுதலை பெற்றார் என்பதைக் கண்டோம். அந்த அற்புதமான கந்தன் பூசையைச் சிந்தை மகிழ கச்சியப்பர் நாடோறும் நடாத்த மேற்கொள்கிறார். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி போது ஆறிலும் புவனம் புகழ பூசைகள் நடந்து வருகின்றன. ஒரு நாள் இரவு; கச்சியப்பர் கரணமெலாம் குழைய கனவில் முருகன் காட்சி தந்தான்.

Top