You are here
Home > செய்திகள் > 32 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

32 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

ஆன்மநேய அன்பர்களே!

ஆண்டுதோறும் திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 32ம் ஆண்டு முற்றோதல் விழாவை எடுக்கின்றன. இவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றில் இரண்டாம்(2) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது.

கரோனா காரணமாக அரசின் அறிவுறுத்தலின்படி இவ்வாண்டு விழா நடைபெறுகிறது. அன்பர்கள் அதற்கேற்ப ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறோம்.

நாளும் நேரமும்:
01-01-2023 ; ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல்
இரவு 9.00 மணி வரை

இடம்:
சேவா நகர் சமூக நலக்கூடம், சேவா நகர் 1வது தெரு, வேளச்சேரி, சென்னை – 42
(வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலகம் அருகில்)

அனைவரும் வருக ! அருள்நலம் பெறுக!!.

இங்ஙனம்
சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப் பண்பாட்டு ஆராய்ச்சி மன்றம்
தெய்வத்தமிழ் அறக்கட்டளை
திருமுறை பாதுகாப்பு சங்கம்
செந்தமிழ் ஆகம அந்தணர் சிறப்பவை

 

Top