You are here
Home > கட்டுரைகள் > அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே! சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் நாடு விடுதலை பெற்றது!

அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே! சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் நாடு விடுதலை பெற்றது!

செங்கோல் சிறப்பு 15-8-1947

‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’

நம் இந்தியத் திருநாடு நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார். நேருவிற்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லையாம்! உடனே சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரபூர்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கப்பட்டவரல்லர். எனவே, இராஜாஜி அவர்களிடம் கூறினார். அந்த மூதறிஞர் உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டார். அன்றைய ஆதீனம் அப்போது காய்ச்சலால் அவதியுற்றுக் கொண்டிருந்தார். எனவே ஆதீனக் கட்டளைத்தம்பிரான் ஒருவரும், ஓதுவார் ஒருவரும் டெல்லிக்குத் தனிவிமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடாயிற்று.

புறப்படும்போது ஓதுவார் அச்சத்துடன் ஆதீனத்தைப் பார்த்து அரசு விழாவில் தான் பாடவேண்டிய திருமுறைப்பாடல் எது எனக் குறிப்பிட்டுக் கட்டளை இடவேண்டும் என்று கேட்டார்; ஆதீனமும் சொன்னார்.

செங்கோல் சிறப்பு 15-8-1947
செங்கோல் சிறப்பு செங்கோல் சிறப்பு 15-8-1947

விமானத்தில் ஏறி டெல்லிக்குக் கட்டளைத் தம்பிரானும் ஓதுவாரும் சென்றாயிற்று. அன்று காலை உலகே வியந்து நோக்கிய விழாவும் வந்தது. கட்டளைத் தம்பிரான் நேருவிடம் உரிய நேரத்தில் ஆதீனம் கொடுத்தனுப்பிய தங்கமுலாம் பூசிய ஆணைச் செங்கோலைக் கொடுத்தார். ஓதுவார் அப்போது கோளறு பதிகத்தின் இறுதிப் பாடலாகிய இந்தப் பாடலைத் தான் பாடினார்; அவர் கம்பீரமாகப் பாடிய இப்பாடலின் இறுதி வரி:

‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’

அடடா! இந்நாடு விடுதலை பெற்றது சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் என்னும்போது உடல் சிலிர்க்கிறது; உள்ளம் பூரிக்கிறது.

எத்தனையோ மொழிகள் இந்நாட்டில் நிலவ நம் செந்தமிழ் ஒலிக்க நாடு விடுதலை பெற்றது! அதனால் தான் அண்மைக் காலத்தில் அமெரிக்க வல்லரசு கூட பொருளாதார ஆட்டம் கண்ட போது இந்தியா நின்று நிலைத்து சமாளித்தது! ஆணை நமது என்ற சம்பந்தரின் ஆசி மொழி வீணாகுமா!

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதிய ‘கோளறு பதிகம்-விரிவுரை’ நூலிலிருந்து…

Top