உ மந்தார விநாயகர் பைந்தமிழ்ப் பதிகம் பிள்ளையார்ப்பித்தன் இரா.உமாபதி முத்தமிழ் அடைவை முற்படு கிரியில் முற்பட வெழுதிய முதல்வ! சத்திநி பாதம் மலபரி பாகம் இருவினை ஒப்பினைத் தந்து தத்துவக் கூட்டம் அனைத்தையுங் கடக்கத் தமியனேற்(கு) அருள்வையோ! ஞான வித்தக மூர்த்தி! விமல! மந்தார விநாயக! விரைகழல் சரணே! 1 இருந்தமிழ் மொழிக்கே உரிய ஓங்கார எழுத்(து)அதன் வரிவடி வோடு பெருங்குரல் ஓசைப் பிளிறலுங் கொண்ட பிராணியாம் மதகரி முகத்தாய்! கரைந்துநெஞ்(சு) உருகி உனைத்தொழா(து) உவரி கடைந்திட வந்தநஞ்(சு) அருந்தி விருந்(து) அமிழ்(து) அளித்தோன் மைந்த! மந்தார விநாயக! விரைகழல் சரணே! 2 நற்றமிழ் முனிவன் அகத்தியன்
பொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா
கந்த சஷ்டி பெருவிழா
கந்த சஷ்டி பெருவிழா ஆண்டு தோறும் நடப்பதுபோல், இவ்வாண்டும் கந்த சஷ்டி பெருவிழாவினை முன்னிட்டு ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி முதல் தெரு, எண்.6 தெய்வத்திரு.சிவப்பிரகாசம் அரங்கில் 20.10.2017 முதல் 25.10.2017 வரை மாலை 5.00 மணி அளவில் முருகன் திருவுருவத்திற்கு வழிபாட்டினை தமிழ் முறையில் கூட்டு வழிபாடாக ஆற்றியும், அதையொட்டி, செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் ஆசியாலும் வழிநடத்துதலின் பேரிலும் முருகன் புகழை பாடிப் பரவிய அடியார்களையும் அவர்கள்
கௌரி நோன்பு வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:6)
நவராத்திரி வழிபாடு பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 3)
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:4)
சேக்கிழார் ஞானவேள்வி 16-09-2017
17 ஆம் ஆண்டு நால்வர் விழா பன்னிரு திருமுறை மன்றம் 10-09-2017
வள்ளலார் தொண்டு நிறுவனம் ,நெசப்பாக்கம் 14-09-2017
ஊழும் உயர்குறள் மூன்றும் – விதியின் வலிமை, முயற்சியின் பயன்,பெருமை
ஊழும் உயர்குறள் மூன்றும் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் 1. ஊழிற் பெருவலி யாவுன மற்றொன்று சூழினும் தான்முந்(து) உறும். 2. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 3. ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா(து) உஞற்று பவர். மேற்கண்ட மூன்று குறள்களை எடுத்தாளாத தமிழ்ப் பேச்சாளரே இல்லை எனலாம். இவற்றில் விதியின் வலிமை முதல் குறளில் கூறப்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது குறள்கள் முறையே முயற்சியின் பயனையும், பெருமையையும் கூறுகிறது. அவ்வாறு முயற்சியின் பெருமையைக்கூறும்போது அக்குறள்கள் விதியின்