You are here
Home > செய்திகள் (Page 3)

திருமாலும் சிசி டிவியும்

தமிழ்ப் புலவர்களின் கற்பனைக்கு ஈடாக உலகின் வேறெந்த மொழிப் புலவனின் கற்பனையையும் கூற முடியாது. ஒன்று புலவனின் கற்பனை வளம்; மற்றது தண்டமிழ்த் தனி வளம். தமிழ் நாட்டில் திருவீழிமிழலை என்று ஒரு தலம். அங்கே திருமால் சிவபெருமானை வணங்கிப் பூசை செய்தாராம்! சும்மா ஒரு நேர்த்திக் கடன்! வேறெவரிடமும் இல்லாத மிக உயர்ந்த ஆயுதமான சக்ராயுதம் வேண்டி செய்த பூசை! அரிய ஆயுதம் வேண்டுமென்றால் பெரிய பூவால் தானே பூசை

வரலாற்றில் மறைந்த வேலையாள் (தொடர்ச்சி – பாகம் 2)

பணியாளாகிய ஊட்டுவான் பாடலிபுத்திர நகரிலிருந்து புறப்பட வேண்டும். எப்போது? அதையும் அப்பர் குறிப்பாலேயே கூறினார் என்று பின்னொரு பாடலில் குறிப்பிடுகிறார் சேக்கிழார். அதாவது பகலில் செல்ல வேண்டாம்! சமண் சமய தலை நகரமான பாடலிபுத்திரத்தில் மக்கள் நடமாட்டம் நிறைய இருக்கும். எனவே இந்த சமண் சமய மடத்திலிருந்து ஒரு சமையற்காரர் எங்கே போய்க் கொண்டிருக்கிறார் என்று எல்லோரும் கவனிப்பார்கள்! எனவே யாராவது பின் தொடர்ந்தால் சமண மடத்திலிருந்து சைவ மதத்திற்கு

வரலாற்றில் மறைந்த வேலையாள்!!

உண்மையில் ஒருவர்க்கு வேலையாள் அமைவது என்பது உயர்ந்த வரம்; எல்லோருக்கும் அமையாது! சபாபதி என்று ஒரு பழங்கால திரைப்படம்; முதலாளி சோடா உடைத்துக் கொடு என்பார்; உடனே சபாபதி சோடா பாட்டிலை உடைத்து நீட்டுவான். இந்தக் கொடுமையை என்ன சொல்ல! ஆனால் திரைப்படம் முழுவதும் முதலாளி அந்த வேலையாளொடு தான் உழலுவான்! அந்தப் படமே அந்த வேலையாளின் முட்டாள்தன புராணம் தான்! இப்படி இருந்தும் அந்த வேலையாளை முதலாளி இறுதிவரை நீக்கவில்லை.

நயத்தமிழ் செய்த நன்மை

எதையும் நயமாகச் சொல்ல வேண்டும்; சொன்னால் அது கேட்பவருக்கு அர்த்தத்தையும் அளிக்கும்; ஆனந்தத்தையும் அளிக்கும். அதனால் நடக்காததையும் நடக்குவிக்கலாம். மனைவி இட்லியைப் பரிமாறுகிறாள்; கணவன் சொல்கிறான். "அட! தலையில் வைக்க வேண்டியதை இலையில் வைச்சுட்டியே!" என்கிறான். மனைவி என்னங்க என்று அலங்க மலங்கக் கேட்கிறாள். "ஒண்ணுமில்லை, இட்டிலி மல்லிப்பூ மாதிரி இருக்கே, அதைச் சொன்னேன்!" என்கிறான் கணவன். மனம் மகிழ்ந்து போன மனைவி இலையில் இன்னும் இரண்டு இட்டிலி வைக்கிறாள்.

கூத்தில் நடந்த கூத்து

"எடுத்த காரியங்களில் எல்லாம் அர்ப்பணிப்புடன் பணி ஆற்ற வேண்டும்.!" என்று பெரியோர் கூறுவது மரபு. இந்தப் பொன்மொழியை எழுதி தன் அறையின் நுழைவுக் கதவில் பதித்து வைத்திருந்தார் ஓர் அரசு அதிகாரி. அவரிடம் ஒருவர் மனுவோடு முறையிட்டார்: "ரொம்ப நாளா அலையறேங்க!" அதிகாரி சொன்னார்: "நுழைவுக் கதவை மறுபடியும் போய் பார்த்துவிட்டு வா! "மனுதாரர் பார்த்து விட்டு வந்து அந்த பொன்மொழியைச் சொன்னார். அப்புறம்! 'அர்ப்பணிப்பு' இல்லாம வேலை எப்படி நடக்கும்? என்று

விநோதமான வியாபாரம்

அறம் தான் தமிழர்க்கு உயிர்வளி (Oxygen). இங்கெல்லாம் முடியாது என்று உலகம் கருதும் வணிகத்திலும், போரிலும் கூட அறத்தைப் பின்பற்றி உலகிற்கே வழிகாட்டிய உன்னத இனம் தமிழ் இனம்; அதனால் அறப்போர் என்றும் அறவிலை வணிகம் என்றும் சொற்கள் தமிழில் மட்டும் தான் உண்டு. திடீர் தாக்குதல், மறைந்து தாக்குதல் என்பதை எல்லாம் இழிவாகக் கருதியவர்கள் தமிழர்கள்; வீரமன்று என்று ஒதுக்கியவர்கள். ஏழுதிணை அட்டவணை போட்டு, பூ காட்டி போர் காட்டியவர்கள்.

சிவபெருமான் சிறைக்குள்ளே!

உலகமே கரோனாவால் நடுங்கி ஒடுங்கிச் செத்துக் கொண்டிருக்கிறது. உலகின் எல்லா மூலையிலும் நடுக்கம்! மக்களின் நடுக்கத்தால் பூமியே சற்று வேகமாகச் சுற்றுகிறது, நமக்கு கடவுளின் மீதே கோபம் வருகிறது. சிவனை கருணாகரன் என்பர்; ஆனால் சிவன் இப்ப கரோனாகரன் ஆகிவிட்டான். ஆதிக்க நாடுகள் கூட பாதிக்கப்பட்டு மருந்துக்காகத் திருவோடு ஏந்தி தெருவோடு திரிகின்றன. இதுதான் மருந்து என்று கூட கண்ணில் காட்டாமல் இதென்ன நோய் என்று காறி துப்பலாமா என்றால்

உவமையில் வந்த உவகை

ஒரு புலவனின் உயர்வை அவன் கையாளுகிற உவமை புலப்படுத்தி விடும். அதுவே அவனைக் காட்டும் அளவுகோல். "பையன் சரியா மார்க் வாங்கலை சார்! அதனால் நேற்றைக்கு அவனுக்குத் தனி ஆவர்த்தனம் தான்! என்றால் அவர் மிருதங்கக்காரர்; அந்தப் புலவர் பேர் மாமூலனார் என்று சொன்னீங்களே, அவர் காவல் துறையைச் சேர்ந்தவரா என்று கேட்டால் கேட்டவர் யார் என்று தானே விளங்குகிறது. ஆகா உவமையைக் கொண்டே அவர் யார் என்று தெரிந்துவிடும். ஆனால்

பதைக்கையில் ஒரு பைந்தமிழ்ப் பரிந்துரை

இது நடந்தது ஒரு கப்பல் பயணத்தில். மொரீஷியஸ் நாட்டிற்கு விருந்தினராகச் சென்ற போது அன்பர்கள் ஒரு பெரிய உல்லாசக் கப்பலுக்கு அழைத்துச் சென்றனர். திடீரெனப் பெருமழை பெய்ததால் ஒரு நாள் இரவு கப்பலிலேயே தங்க வேண்டி இருந்தது. அன்பர்களின் அபரிமிதமான உபசரிப்பில் நன்றாகத் தூங்கிப் போனேன். திடீரெனப் பார்த்தால் புராணப் படங்களில் வருபவர் போல ராஜகம்பீரமாக ஒருவர் என் அருகே வந்தமர்ந்தார். சரியாகக் கணித்து விட்டீர்கள்! கனவு தான்! நான் படுக்கையிலிருந்து

பெரு நடிகரும் பைந்தமிழும்

பெரியபுராண உரை நூலில் மூழ்கி இருந்தேன். பொதுவாக நான் படிக்கும் போது தூங்குவதில்லை. ஆனால் தூங்கும் போதும் ஏதாவது ஒரு நூலை, அதில் உள்ள பாடலை மனம் தொடர்ந்து அசை போட்டுக் கொண்டே இருக்கும். அப்படி மனனமான பாடல்கள் பல. என்னவோ தெரியவில்லை அன்று பெரிய புராணத்தை படித்துக் கொண்டே தூங்கி விட்டேன். திடீரென்று பார்த்தால் கனவில் சேக்கிழார் வந்து நிற்கிறார்; பணிந்தேன்; "வா! போகலாம்" என்று அழைக்க அவருடன்

Top