உ முருகா ஆசிரியர் மேசையிலிருந்து. . . தாலியும் தமிழரும் என் கைபேசி பாடி அழைத்தது; அன்று 12-3-2015. எடுத்துப் பேசியதில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியிலிருந்து பழகிய குரல் என்னை அழைத்தது. அன்று மாலை ‘மக்கள் மேடை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூற வேண்டும் என்றார் அவர். எது பற்றி என்று கேட்ட போது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வளாகத்தில் அன்று காலை 3.00 மணிக்கு யாரோ சில விஷமிகள் குண்டு
கட்டுரைகள்
பியந்தைக் காந்தாரம் – ஓர் ஆய்வு
முருகா பியந்தைக்காந்தாரம் - ஓர்ஆய்வு செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்திய வேல் முருகனார், B.E., M.A., M.Phil. தமிழிசைச்சங்கத்தின் தமிழ் இசைக் கல்லூரியும், சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்தும், செவ்விலக்கியங்களில் காணப்படும் பண்களுக்கான பயிற்சிப் பயிலரங்கத்தில் இன்று காலை பியந்தைக் காந்தாரப் பண் பற்றிய ஆய்வுச் சொற்பொழிவு ஆற்ற அழைக்கப்பட்டதை அரும்பெரும் பேறாகக் கருதுகிறேன். பியந்தைக்காந்தாரம்அருளரசப்பண் : பொதுவாக பண் உள்ளுக்குள் என்னென்னவெல்லாம் செய்து கொண்டு வெளிவரும் என்று ஐந்தொகையாம் பஞ்சமரபில் ஒரு செய்யுள் உண்டு.
முழுமுதற் கடவுள் விவாதம் – செய்திகள்
உ செய்தி 1 ‘ஓசையின் ஆன்மிகம்’ என்ற மலேசிய இதழில் ‘ஐயம் தெளிக’ 167 / 12-8-2014 என்னும் தலைப்பில் சிவத்தமிழ்ச் செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள் க.சிவபாலன் / கிள்ளான் என்ற அன்பரின் ஓர் ஐயத்திற்கு விடையளித்திருந்தார். இதில் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள், சிவனே பரம்பொருள் என்றும் உமையம்மை, விநாயகன், முருகன் ஆகியோர் சிறுதெய்வங்களே என்றும் சாதித்திருந்தார். இதனால் மலேசியாவில் இருக்கும் அன்பர்கள் மனதில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. இந்தச்